மத உணர்வுகளை புண்படுத்தியதாக இந்திய கிரிக்கெட் வீரர் தோனி மீது தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தோனி மீதான வழக்கை, விசாரணை நீதிமன்றம் குற்றவியல் வழக்காக எடுத்துக்கொண்டது சட்டத்தை பரிகாசம் செய்வது போல் உள்ளதாகவும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதி நீதிபதி தீபக் மிஸ்ரா அடங்கிய அமர்வு, தோனி மீது எந்த குற்றவியல் நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது என உத்தரவிட்டு, வழக்கை தள்ளுபடி செய்தது. இந்துக்கடவுளான விஷ்ணு வடிவில் தோனி இருப்பது போன்ற படத்தை வணிக இதழ் ஒன்று அட்டைப்படத்தில் வெளியிட்டது. அந்தப்படத்தின் தோனியின் கரங்களில் காலணி உள்ளிட்ட பொருட்கள் இருப்பது போன்றும் சித்தரிக்கப்பட்டது. இதனை எதிர்த்து கர்நாடகாவை சேர்ந்த ஜெயக்குமார் ஹிராமத் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இதேபோல் ஆந்திராவிலும் தோனி மீது வழக்கு தொடரப்பட்டது.
Loading More post
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
திமுக - ஐயூஎம்எல், மமக கட்சிகள் இடையே கையெழுத்தானது தொகுதி பங்கீடு ஒப்பந்தம்
துணை முதல்வர் ஓபிஎஸ்-ஐ சந்திக்க நேரம் கேட்ட தேமுதிக!
கன்னியாகுமரியில் ராகுலின் படகு சவாரிக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?