அபிநந்தன் மாதிரியான 54 இந்திய வீரர்கள் - ‘ தி மிஸ்ஸிங் 54’ன் வரலாறு!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பாகிஸ்தான் சிறையில் 1971ம் ஆண்டு முதல் 54 இந்திய வீரர்கள் இருப்பதாகவும் இதனை பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. 


Advertisement

பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்ட விமானி அபிநந்தன் இன்று விடுதலையாவார் என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் அறிவித்தார். இந்த அறிவிப்பை இந்தியாவில் உள்ள பலரும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தான் சிறையில் அபிநந்தன் மாதிரியான 54 இந்திய வீரர்கள் இருப்பதாகவும் அவர்கள் ‘ தி மிஸ்ஸிங் 54’ என்று அழைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.


Advertisement

என்ன சொல்கிறது வரலாறு?

1971ம் ஆண்டு போரின் போது இந்தியாவிடம் பாகிஸ்தான் சரணடைந்தது. அப்போது பாகிஸ்தான் வீரர்கள் 90ஆயிரம் பேரை இந்தியா போர்க்கைதிகளாக ஏற்றுக்கொண்டது. பிறகு சிம்லா ஒப்பந்தத்தின்படி அனைவரும் விடுவிக்கப்பட்டனர். ஆனால் பாகிஸ்தான் சிறையில் இந்திய வீரர்கள் 54 பேர் இருந்து வருவதாகவும், அவர்கள் அங்கு இருப்பதை அந்நாட்டு அரசு தொடர்ந்து மறுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் 1989ம் ஆண்டு பாகிஸ்தானின் அப்போதைய பிரதமர் பெனாசிர் புட்டோ, தங்கள் நாட்டில் இந்திய வீரர்கள் இருப்பதை ஒப்புக்கொண்டதாகவும் இது குறித்து நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார். இது குறித்து அப்போதைய இந்திய பிரதமரான ராஜிவ் காந்தியிடமும் உறுதியும் அளித்துள்ளார். ஆனால் நாட்கள் உருண்டோட இந்த விவகாரம் கண்டுகொள்ளாமல் விடப்பட்டது. 


Advertisement

பின்னர் பாகிஸ்தான் அதிபராக முஷாரப் பதவியேற்ற பிறகு தங்கள் நாட்டின் இந்திய வீரர்கள் யாரும் இல்லை என்று தெரிவித்தார். ஆனால் 1972ல் டைம் இதழ் வெளியிட்ட பாக் சிறைவாசிகளின் புகைப்படத்தில் இந்திய வீரரின் புகைப்படம் இருந்ததாகவும், அதனை அவரின் குடும்பம் அடையாளம் கண்டதாகவும் கூறப்படுகிறது.

பெனாசிர் புட்டோவின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய பிரிட்டன் வரலாற்று அறிஞரும், பாகிஸ்தான் சிறையில் இந்திய வீரர்கள் இருப்பதாகவும் இந்த விவரத்தை பெனாசிரின் வழக்கறிஞர் தன்னிடம் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

சிறையில் உள்ள வீரர்களை மீட்க அவர்களது குடும்பத்தினர் தொடர்ந்து முயன்று வருவதாகவும், ஐநா வரை சென்றும் பயனில்லை என்றும் கூறப்படுகிறது. 

loading...

Advertisement

Advertisement

Advertisement