ராகுல் டிராவிட் ஆலோசனையால் மீண்டேன்: கே.எல்.ராகுல்

Time-spent-with-Dravid-helped-me-a-lot--says-KL-Rahul

ராகுல் டிராவிட்டின் ஆலோசனைகள் எனது விளையாட்டை மீட்க உதவியது என்று இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார். 


Advertisement

‘இந்திய ‘ஏ’ அணிக்காக விளையாடிய போது அதன் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் நிறைய ஆலோசனைகள் வழங்கினார். அது மிகவும் உதவி கரமாக இருந்தது’ என்று தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் வீரர் லோகேஷ் ராகுல், சர்ச்சைகள் தன்னை மேலும் பணிவான மனிதராக மாற்றி யதாகவும் குறிப்பிட்டார்.

கரண் ஜோஹரின் காபி வித் கரண் நிகழ்ச்சியில், பெண்கள் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாக பிரச்னை எழுந்தது. இதற்காக ஹர்திக் பாண்ட்யாவும், கே.எல்.ராகுலும் இந்திய கிரிக்கெட் வாரியத்தால் தடை செய்யப்பட்டனர். இதனால் ஆஸ்திரேலிய தொடரில் இருந்து இருவரும் நீக்கப்பட்டு உடனடியாக இந்தியா திரும்பினர். பின்னர் பாண்ட்யா, நியூசிலாந்து தொடரில் விளையாட அனுமதிக்கப்பட்டார்.


Advertisement

கே.எல்.ராகுல் இந்திய ஏ அணியில் ஆடுவதற்கு அழைக்கப்பட்டார். இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக சிறப்பாக ஆடியதால் அவர் மீண்டு ம் இந்திய அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 50 ரன் எடுத்த அவர், இரண்டாவது டி20 போட்டியில் 47 ரன் எடுத்தார். அவரது ஆட்டம் தேர்வு குழுவைத் திருப்தி அடைய வைத்துள்ளதால் உலகக் கோப்பை தொடரில் அவருக்கான இட ம் உறுதியாகி விட்டது என்று கூறப்படுகிறது. அதோடு டி20 சர்வதேச பேட்டிங் தரவரிசையில் 6வது இடத்துக்கு முன்னேறியுள்ளார் கே.எல். ராகுல்.

இந்நிலையில் அவர் கூறும்போது, "சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சில நேரம் ஓரங்கட்டப் பட்டேன். அதன் பின் இந்தியா ஏ அணியில் சேர்க் கப்பட்டேன். எங்கு தவறு நடக்கிறது என்பதை கவனித்து, ஆட இது உதவியது. அதோடு ஏ அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுடன் அதிக நேரத்தை செலவிட்டேன். எனது விளையாட்டு நுட்பம் பற்றி அவர் கொடுத்த ஆலோசனைகள் எனது விளையாட்டை மீட்க உதவியது. 


Advertisement

டிவி ஷோவில் நடந்த சர்ச்சைக்குரிய பேச்சு பற்றி கேட்கிறீர்கள். அது அனுபவம் இல்லாத பேச்சு என்பதை புரிந்து கொண்டேன். அது சோதனை யான காலகட்டம் என்பதில் சந்தேகமில்லை. ஒவ்வொருவருக்கும் சோதனையான காலகட்டம் என்பது வரும். இப்போது எனக்கு வந்திருக் கிறது. இந்த நேரத்தில் எனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்’’ என்றார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement