ஓய்வு முடிவை மாற்றுகிறார் கிறிஸ் கெய்ல்!

Chris-Gayle-hints-at--un-retirement--after-six-laden-162

இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது ஒரு நாள் போட்டியில் 162 ரன் விளாசியதை அடுத்து, தனது ஓய்வு முடிவை மாற்ற இருப்பதாக கிறிஸ் கெய்ல் சூசகமாகத் தெரிவித்துள்ளார். 


Advertisement

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையே, 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டித் தொடர் நடந்து வருகிறது. பிரிட்ஜ்டவுனில் நடந்த முதலாவது போட்டியில், இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. இரண்டாவது ஒரு நாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி, ஹெட்மையரின் சதத்தால் வெற்றி பெற்றது. மூன்றாவது ஒரு நாள் போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டது. 


Advertisement

இந்நிலையில் நான்காவது ஒரு நாள் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 418 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இங்கிலாந்து அணியின் சிறப்பான ஸ்கோர் இது. ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி, 400 ரன்களை கடப்பது இது 4-வது முறை.

பின், 419 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஒரு பக்கம் கிறிஸ் கெய்ல் வெளுத்து வாங்கினாலும் அவருக்குத் துணையாக யாரும் நிலைத்து நிற்காததால் அந்த அணி, 48 ஓவர்களில் 389 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

32 பந்தில் அரை சதம் அடித்த கெய்ல், 55 பந்தில் சதமும் 85 பந்தில் 150 ரன்னும் விளாசினார். அவர் 97 பந்துகளில் 14 சிக்சர், 11 பவுண்டரியுடன் 162 ரன் விளாசினார். இந்த போட்டியின் மூலம் பத்தாயிரம் ரன்களை கடந்த இரண்டாவது வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற மைல்கல்லையும் அவர் எட்டினார். இதற்கு முன் வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிரையன் லாரா பத்தாயிரம் ரன்னை கடந்திருந்தார்.


Advertisement

இந்நிலையில் 162 ரன் விளாசியதை அடுத்து, தனது ஓய்வு முடிவை மாற்ற இருப்பதாக கிறிஸ் கெய்ல் சூசகமாகத் தெரிவித்துள்ளார். 

அவர் கூறும்போது, ‘’நான் விளையாடிய போட்டிகளில் விறுவிறுப்பாக அமைந்த போட்டி இது. நான் அதிகமாக டி20- போட்டிகளில் விளையாடி விட்டு 50 ஒவர் போட்டிக்கு வந்துள்ளேன். அதனால் கொஞ்சம் கடினம்தான். ஆனால் உடல் 50 ஒவர் கிரிக்கெட்டுக்கு ஏற்றவாறு மாறிவிட்டது. இன்னும் கொஞ்சம் பயிற்சி செய்து உடலை கச்சிதமாக மாற்றி விட்டால், இன்னும் சில காலம் என் ஆட்டத்தைப் பார்க்கலாம். விஷயங்கள் விரைவில் மாறும். என் உடல் இன்னும் 2 மாதங்களில் முழுமையாக ஃபிட் ஆகிவிடும். 10,000 ரன்கள் மைல்கல்லை எட்டியது பெருமையாக இருக்கிறது’’ என்றார்.


 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement