அண்ணன் முகேஷ் அம்பானி சொத்து மதிப்பு கிடுகுடு.. சரிந்தது தம்பியின் சொத்து மதிப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கடந்த 7 ஆண்டுகளில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு உயர்ந்துள்ள நிலையில், அவரது தம்பி அனில் அம்பானியின் சொத்து மதிப்பு மிகக் கடுமையாக சரிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Advertisement

ஹுருன் (Hurun global rich list) நிறுவனம் 2019 ஆம் ஆண்டிற்கான உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி உலகளவில் பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பெசோஸ் முதலிடத்திலுள்ளார். மேலும் இந்தப் பட்டியலில் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி 8வது இடத்தைப் பெற்றுள்ளார். இந்தியாவிலிருந்து ஒருவர் இப்பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் இடம்பெறுவது இதுவே முதன்முறை. அத்துடன் இந்தாண்டு பட்டியலில் ஆசியாவிலிருந்து இடம்பெற்ற ஒரே நபர் முகேஷ் அம்பானிதான்.


Advertisement

இப்பட்டியலின்படி முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ரூ3.83லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. முகேஷ் அம்பானியின் சொத்து வளர்ச்சிக்கு காரணம் அவரின் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகளின் உயர்வே எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு அதிகரிக்க அவரின் சகோதரரான அனில் அம்பானியின் சொத்து மதிப்பு குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது அனில் அம்பானியின் சொத்து மதிப்பு கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 65% குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதற்கு அனில் அம்பானியின் ரிலையன்ஸ் தொலைத் தொடர்பு நிறுவனம் திவால் ஆனதே முக்கிய காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Advertisement

ஏற்கெனவே ஃபோர்ப்ஸ் பணக்காரர்கள் பட்டியல் 2007ன் படி அனில் அம்பானியின் சொத்து மதிப்பு 45 பில்லயன் டாலராக இருந்தது. அதே பட்டியலின்படி முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 49 பில்லியன் டாலராக இருந்தது. ஆனால் ஃபோர்ப்ஸ் பணக்காரர்கள் பட்டியல் 2017ன்படி அனில் அம்பானியின் சொத்து மதிப்பு 3.15 பில்லியன் டாலராக குறைந்துள்ளது தெரியவந்தது. 

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ஹுருன் பணக்காரர்கள் பட்டியலின்படி கடந்த ஏழு ஆண்டுகளில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 30 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. அதேசமயம் அனில் அம்பானியின் சொத்து மதிப்பு 5  பில்லியன் டாலர் அளவில் குறைந்துள்ளதாக இந்தப் பட்டியல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement