வாழ்வா? சாவா? கட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டி20 போட்டி பெங்களூருவில் இன்று நடைபெறுகிறது.


Advertisement

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான முதல் டி20 போட்டி விசாகப்பட்டினத்திலுள்ள ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி மைதானத்தில் கடந்த 24-ஆம் தேதி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது. இறுதிவரை விளையாடிய தோனி 37 பந்துகளில் 29 ரன்கள் மட்டுமே குவித்தார். 


Advertisement

இதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் 2 விக்கெட்டுகளுக்குப் பிறகு வந்த மேக்ஸ்வெல் அதிரடியை வெளிப்படுத்தி ஆட்டத்தை மாற்றினார். 43 பந்துகளில் அவர் 56 ரன்களை எடுத்து அவுட் ஆகினார். தொடக்க ஆட்டக்காரரான ஆர்ஸி ஷார்ட் 37 (37) ரன்கள் எடுத்தார். கடைசி மூன்று ஓவர்களில் ஆட்டம் த்ரில் ஆனது. 

இறுதியில் இரண்டு ஓவர்களுக்கு 16 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்கு சென்ற ஆஸ்திரேலியா திடீரென 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. 


Advertisement

இந்நிலையில், இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டி20 போட்டி பெங்களூருவில் இன்று நடைபெறுகிறது. சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டி, இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இன்று நடைபெறும் வாழ்வா? சாவா?‌ போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்யுமா என ரசிகர்கள் ஆவலோடு எதிர் நோக்கி உள்ளனர்.
 

loading...

Advertisement

Advertisement

Advertisement