பேருந்தில் பெண்களை கிண்டல் செய்த இளைஞர்கள்.. தட்டிக்கேட்ட நடத்துநர் மீது தாக்குதல்..!

Attack-on-bus-conductor-in-chennai

பேருந்தில் பெண்களை கிண்டல் செய்த நபர்களை தட்டிக் கேட்ட நடத்துநரை, தாக்கிவிட்டு தப்பியோடிய இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


Advertisement

சென்னை மேடவாக்கம் கூட்டுசாலையில் மாநகர பேருந்து ஒன்று தாம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அதில் ஏறிய 4 இளைஞர்கள் அங்கிருந்த பெண்கள் சிலரை கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதை கண்ட நடத்துநர் உதயகுமார், அவர்க‌ளை கண்டித்ததோடு, நால்வரையும் பேருந்தில் இருந்து இறங்குமாறு அறிவுறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள், கையில் இருந்த டிபன் பாக்சை கொண்டு நடந்துநர் உதயகுமாரை கடுமையாக தாக்கிவிட்டு தப்பியோடினர்.

இதில் நடத்துநர் உதயகுமாருக்கு கை மற்றும் தலையில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து பேருந்து ஓட்டுநர்கள் அவர்களை கைது செய்யக் கோரி பேருந்தை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணிநேரம் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் உதயகுமாரிடன் புகாரை பெற்றுக் கொண்ட பள்ளிக்கரணை போலீசார், தாக்கிய நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement