பட்டியலினத்தைச் சேர்ந்தவன் என்பதால் மூன்று முறை தனக்கு முதலமைச்சர் பதவி மறுக்கப்பட்டதாக கர்நாடக துணை முதல்வர் பரமேஸ்வரா கூறியுள்ளார்.
கர்நாடக துணை முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அவர் பகிரங்கமாக இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பரமேஸ்வரா, “பட்டியலின தலைவர்களின் வளர்ச்சியை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலரே தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
முதலமைச்சரை தேர்வு செய்யும் ஜாதியின் அடிப்படை பார்க்கப்படுகிறது. பசவலிங்கப்பா முதலமைச்சர் பதவியை தவறவிட்டார். அதேபோல், கே.ஹெச்.ரங்கநாத். என்னுடைய மூத்த சகோதரர் மல்லிகார்ஜுன கார்க்கேவால் முதலமைச்சராக ஆக முடியவில்லை. பல்வேறு சிக்கல்களுக்கு பிறகு என்னை துணை முதலமைச்சாராக ஆக்கியுள்ளனர்” என்று கூறினார்.
ஆனால், பரமேஸ்வராவின் குற்றச்சாட்டுகளுக்கு, முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மறுப்பு தெரிவித்துள்ளார். “காங்கிரஸ் கட்சி பட்டியலினத்தவருக்கு நிறைய செய்துள்ளது. அவர்களின் நலன்களில் அக்கறை கொண்டுள்ளது. எந்த அர்த்தத்தில் பரமேஸ்வரா இந்த கருத்தினை கூறினர் என்பது தெரியவில்லை. அவரிடமே விளக்கம் கேட்பது சரியாக இருக்கும்” என்று சித்தராமையா கூறியுள்ளார்.
கர்நாடக அரசியலில் ஏற்கனவே பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகிறது. ஆளும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கும் காங்கிரஸ்க்கும் இடையே நிறைய கருத்து முரண்பாடு தொடர்ச்சியாக உருவாகி வருகிறது. காங்கிரஸ் கட்சிக்குள்ளே சில எம்.எல்.ஏக்கள் அதிருப்தியில் உள்ளனர். இத்தகைய சிக்கல்களுக்கு இடையே பரமேஸ்வரா இத்தகைய பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
Loading More post
"முதல்வர் பழனிசாமி 234 ரன்கள் எடுத்து நாட்-அவுட் பேட்ஸ்மேனாக வருவார்" - ஓ.எஸ்.மணியன்
சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா (93) காலமானார்
நீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி
அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு
"பத்ம விருதுகளை திருப்பியளிக்கவில்லை!" - இளையராஜா விளக்கம்
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?