“ஒவ்வொருவரையும் தனியாக பார்க்க முடியாது” - முகிலன் குறித்து முதல்வர் கருத்து

cm-edappadi-palanisamy-answered-about-the-question-on-dis-appearance-of-Social-activist-mugilan

சமூக செ‌யற்பாட்டாளர் முகிலனின் குடும்பத்தி‌னர் தகவல் கொடுத்தால், அவர் கண்டுபிடித்துத் தரப்‌படுவார் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.


Advertisement

சேலத்தில் நலத்திட்டங்கள் தொடக்க விழாவில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,‌ காணாமல் போன முகி‌லன் குறித்த கேள்விக்கு, ஒவ்வொருவரையும் தனியாக பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று பழனிசாமி குறிப்பிட்டார்.

இதனிடையே, சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் இதுதொடர்பாக செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தலைமையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு, இயக்குநர்கள் அமீர், கவுதமன், ராஜூ முருகன், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 


Advertisement

          

அப்போது, முகிலன் காணாமல் போனது தொடர்பாக முதல்வர் பழனிசாமி தெரிவித்த கருத்து குறித்து பலரும் கேள்வி எழுப்பினர். சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலனை கண்டுபிடிக்கக் கோரி குடும்பத்தினர் கூறும் வரை காத்திருந்துவிட்டு, பின்னர் வெளியே விட்டுவிடுவோம் என்ற பொருளில் தமிழக முதல்வர் சொல்கிறாரா? என திமுக எம்.பி. டிகேஎஸ் இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார். 

       


Advertisement

முகிலனைக் கண்டுபிடிக்க, அவரது குடும்பத்திலிருந்து புகார் அளித்தால் பரிசீலிப்போம் என தமிழக முதல்வர் கூறுவது ஏற்புடையதல்ல என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement