JUST IN

Advertisement

காட்டுத்தீயின் விளைவுகள் காடுகளுக்கானது மட்டுமல்ல; அது வாழ்வியலுக்கான அச்சுறுத்தல்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக பகுதியில் நேற்று காட்டுத்தீ ஏற்பட்டது. கர்நாடகா -தமிழக எல்லையான பண்டிப்பூர் காட்டுப்பகுதியிலும் இந்த தீ விளைவுகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது போன்ற காட்டுத்தீயால் ஏற்படும் விளைவுகள் என்னவென்பதை காணலாம்.
 
காடுகளில் பொதுவாக பேரழிவு ஏற்படுத்தும் பிரச்னை காட்டுத் தீயாகும். காட்டுத்தீ காட்டு வளங்களுக்கு அழிவு ஏற்படுத்துவது மட்டுல்லாமல் விலங்குகள், தாவரங்களை அதிகளவில் அளிப்பதால், சுற்றுப்புற சூழலிலும் மாற்றம் ஏற்படுத்துகிறது. தமிழ்நாட்டில் கடந்த 2016 ஆம் ஆண்டு 113 காட்டுத்தீ சம்பவங்கள் ஏற்பட்டன. அதேபோல, 2017ஆம் ஆண்டு 301 காட்டுத்தீ சம்பவங்கள் ஏற்பட்டதாக India State of Forest Report (ISFR) 2017ன் தரவுகள் தெரிவிக்கின்றன. 


Advertisement

கோடைக் காலங்களிலும், பல மாதங்களுக்கு மழை இல்லாத நேரங்களிலும் காடுகளில் அதிகமான காய்ந்த இலைகள் காணப்படும். அந்த சமயங்களில் வெப்பத்தின் காரணமாக காய்ந்த இலைகள் தீப்பற்றி விடும். சுற்றுப்புற சூழலிலுள்ள வெப்பநிலை, காற்றின் வேகம், மண்ணில் உள்ள ஈரப்ப்பதம், காற்றில் உள்ள ஈரப்பதத்தின் அளவு மற்றும் வறட்சி நிலவும் காலத்தைப் பொறுத்து காட்டுத் தீ ஏற்படுகிறது. அதிக காற்றின் வேகத்தினால் மூங்கில் மரங்கள் உராய்ந்து மற்றும் கற்கள் ஒன்றோடொன்று உருண்டு தீயை ஏற்படுத்துகின்றன. இயற்கை மட்டுமின்றி காட்டுத் தீ மனிதனாலும் ஏற்படுகிறது. 


Advertisement

இப்படி உண்டாகும் காட்டுத் தீயினால் இயற்கையில் சமமற்ற நிலையும், தாவரங்கள் அழிந்து விடுவதால் பலவித பயிர்களுக்கு ஆபத்தும் ஏற்படுகிறது. 

காட்டுத்தீயினால் ஏற்படும் விளைவுகள்:


Advertisement
  •    மரங்கள் மடிந்து விடும்.
  •    நீர்ப்பிடிப்பு பகுதிகள் அழிந்து விடும்.
  •    பலவித தாவரங்கள் மற்றும் விலங்குகள் உயிரிழக்க நேரிடும்
  •    வனவிலங்களின் வாழ்விடம் அழிந்துவிடும்.
  •    காட்டுப் பகுதி குறைதல்.
  •    பூமி வெப்பமடைதல்.
  •    புவி வெப்பமடைவதால் ஒசோன் அடுக்கில் துளை ஏற்பட்டு, சூரியக்கதிர்களின் கசிவு ஏற்படும்.
  •    காடுகள் அழிவதால் காற்றில் கார்பன் டை ஆக்ஸைடு அளவு அதிகரிக்கும்.
  •    காட்டுத்தீயினால் வானிலை மாற்றம் ஏற்பட்டு மக்கள் வாழ்வதற்கு தகுதியற்ற சூழ்நிலை உருவாகும்.
  •    மண் அரிப்பு ஏற்படும்.
  •    மலைகளையே நம்பி வாழும் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்படும்.

இப்படி பல தரப்புகளுக்கும் விளைவை ஏற்படுத்தும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த பொதுமக்கள் தங்களால் ஆன ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென வனத்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இயற்கையை நம்மால் கட்டுப்படுத்த முடியாது என்றாலும் மனிதனால் எந்த விதத்திலும் காட்டுத்தீ ஏற்படாத வகையில் நாம் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டுமென்பதே சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

            

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement