[X] Close

“பாக். உடன் விளையாடாவிட்டால் சரணடைந்ததாகி விடும்” - சசி தரூர்  

Subscribe
Not-Playing-Pakistan-in-World-Cup-Would-be-Worse-Than-Surrender--Says-Shashi-Tharoor

உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாடாதது, சரணடைவதை விட மோசமானது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் கருத்து தெரிவித்துள்ளார்.


Advertisement

புல்வாமா பயங்கரவாத தாக்குதலை அடுத்து, பாகிஸ்தானுடன் ஜூன் 16ஆம் தேதி நடைபெறவுள்ள போட்டியை இந்திய அணி புறக்கணிக்க வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பாகிஸ்தானுடன் விளையாடுவதை புறக்கணிக்க வேண்டும் என இந்திய அணி வீரர் ஹர்பஜன் சிங் வலியுறுத்தினார். ஐசிசி ஆலோசனை கூட்டத்தில் இதுதொடர்பாக வலியுறுத்தப்படும் என்று பிசிசிஐ கூறியுள்ளது. இருப்பினும், பாகிஸ்தானுடன் விளையாடி அதனை தோற்கடிக்க வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட பலர் கருத்து தெரிவித்துள்ளனர். 

              


Advertisement

இந்நிலையில், பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாடுவது குறித்து சசி தரூர் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது ட்விட்டரில், “நினைவில் கொள்ளுங்கள்: 1999ம் ஆண்டு கார்கில் போர் உச்சத்தில் இருந்த போதும், இந்தியா உலகக்கோப்பையில் பாகிஸ்தானுடன் விளையாடி வெற்றி பெற்றது. 

இந்த வரும் பாகிஸ்தானை தோற்கடித்து நாம் பெறுவது வெறும் இரண்டு புள்ளிகள் மட்டுமல்ல. உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாடாதது, சரணடைவதை விட மோசமானது” என்று காட்டமாக கூறியுள்ளார். 1999ல் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடிய போட்டியின் ஸ்கோர் விவரங்களையும் தன்னுடைய ட்விட்டரில் அவர் இணைத்து இருந்தார்.

           


Advertisement

அத்தோடு, “நம்முடைய அரசு தேசிய அளவில் துக்கம் கூட அனுசரிக்காத நிலையில், 3 மாதம் கழித்து நடக்கவுள்ள போட்டியை ரத்து செய்ய விரும்புகிறது?. 40 பேர் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்திற்கு இதுதான் பதிலடியா? இந்தச் சம்பவத்தை கையாலுவதிலிருந்து பாஜக திசை திருப்ப பார்க்கிறது. தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று சசி தரூர் வலியுறுத்தியுள்ளார்.

                 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close