திருப்பதி கோயிலுக்கு ராகுல் நடைபயணம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி திருப்பதியில் இருந்து திருமலைக்கு காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி நடைபயணம் தொடங்கியுள்ளார். 


Advertisement

Related image

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்தக் கோரிக்கையை நிறைவேற்றாததால் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகிய அவர், சிறப்பு அந்தஸ்து கேட்டு பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக கடந்த 11 ஆம் தேதி டெல்லியில் ‘தர்ம போராட்ட தீக்‌ஷா’ என்ற பெயரில் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினார். அந்தப் போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர். 


Advertisement

இந்நிலையில் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடைபயணம் தொடங்கியுள்ளார். 12 கிலோ மீட்டர் நடந்தே சென்று ஏழுமலையானை வழிபடுகிறார். நடை பயணத்தின்போது, பாதுகாப்பு வளையத்தை மீறி பொதுமக்களிடம் ராகுல் காந்தி உரையாடினார். திருமலை சாமி தரிசனத்துக்கு பின்னர் வெங்கடேஸ்வரா மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பங்கேற்க உள்ளார். மேலும் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி அம்மாநில காங்கிரஸ் கட்சி பேருந்து யாத்திரை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

loading...

Advertisement

Advertisement

Advertisement