மதுரையில் பாஜக, அதிமுக நிர்வாகிகளை சந்தித்ததாக வெளியான தகவலுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளன. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் 10 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, இடதுசாரி கட்சிகளுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.
அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகள் உறுதியாகியுள்ளன. மேலும் தேமுதிக உள்ளிட்ட சில கட்சிகளுடன் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. அந்த வரிசையில், அதிமுக - தமிழ் மாநில காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை நடைபெறுவதாக செய்திகள் வெளியானது.
இதனிடையே, பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையத்துக்கு அந்தக் கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா இன்று வந்தார். மதுரை வந்த அமித்ஷாவை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்றார்.
இந்நிலையில், அதிமுக கூட்டணியில் இணைய அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், பாஜக மேலிடப் பொறுப்பாளர் முரளிதர ராவுடன் ஜி.கே.வாசன் மதுரையில் ஆலோசனை செய்ததாக தகவல் வெளியானது.
இதனிடையே புதிய தலைமுறைக்கு பேசிய தமாகா மூத்த தலைவர் ஞானதேசிகன், அதிமுக கூட்டணியில் தமாகா இணையும் என்று கூறினார். அதனால், அதிமுக, தமாகா இடையே சுமூகமான உடன்பாடு எட்டப்பட்டுவிட்டதாக தெரிந்தது.
இந்நிலையில், மதுரையில் பாஜக, அதிமுக நிர்வாகிகளை சந்திக்கவில்லை என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். புதிய தலைமுறைக்கு அவர் அளித்த பேட்டியில், அதிமுக கூட்டணியில் தமாகா இணைவது பற்றிய தகவல்களுக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.
Loading More post
பிருத்வி ஷா - தவான் அதிரடி! சென்னையை வீழத்தியது டெல்லி கேபிடல்ஸ்!
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஜைக்கா நிதி நிறுவனத்துடன் ஒப்பந்தம் - ஆர்.டி.ஐ மூலம் தகவல்
தியேட்டரில் கூடுதலாக ஒரு காட்சி - தமிழகத்தில் புதிய கொரோனா தடுப்பு விதிமுறைகள்
அதிமுக கடலூர் எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் உட்பட 6 பேர் கட்சியில் இருந்து நீக்கம்
தமிழகத்தில் 6 ஆயிரத்தை நெருங்கியது தினசரி கொரோனா பாதிப்பு