Advertisement

16 மணி நேரப் போராட்டம்: குழிக்குள் விழுந்த குழந்தை மீட்பு!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இருநூறு அடி போர்வெல் குழிக்குள் விழுந்த ஆண் குழந்தை, 16 மணி நேரப் போராட்டத்துக்குப் பின் இன்று காலை மீட்கப்பட்டது. 


Advertisement

மகாராஷ்ட்ரா மாநிலம் புனே அருகே உள்ளது தொரண்டல் கிராமம். இங்கு சாலை பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவரின் 6 வயது ஆண் குழ ந்தை ரவி பண்டிட். நேற்று மாலை விளையாடிக் கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.


Advertisement

இதற்கிடையே, போர்வெல்-லுக்காக அருகில் தோண்டியிருந்த குழிக்குள் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டது. பிறகுதான் 200 அடி ஆழ குழிக்குள் குழந்தை விழுந்தது தெரிய வந்தது. 

இதையடுத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு கூடினர். போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் கயிறு மூலம் குழந்தையை மீட்க முயன்றனர். முடியவில்லை. இதனால் குழந்தைக்கு காயம் ஏற்பட்டது.


Advertisement

உடனடியாகத் தேசிய பேரிடர் குழுவுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்தனர். அதற்குள் அந்தக் கிராமத்தினர் குழிக்கு அருகே பள்ளம் தோண்டி, குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பேரிடர் குழுவினரின் ஆலோசனைப்படி குழிக்குள் ஆக்சிஜன் செலு த்தப்பட்டது. மருத்துவர்களும் அங்கு வரவழைக்கப்பட்டனர்.

ஒரு கட்டத்துக்கு மேல் பாறையாக இருந்ததால் உடைக்க முடியவில்லை. தொடர்ந்து மீட்பு பணி நடந்து வந்தது. விரைவில் மீட்டு விடுவோம் என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் குழந்தை இன்று பத்திரமாக மீட்கப்பட்டது. 16 மணி நேர போட்டத்துக்குப் பிறகு குழந்தை மீட்கப்பட்டதும் பெற்றோர்கள் கண்ணீர் மல்க குழந்தையை பெற்றனர். பின்னர் பரிசோதனைக்காக குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. 

loading...
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement