பாப்-அப் செல்ஃபி கேமராவுடன் வெளியானது ‘விவோ வி15 ப்ரோ’

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சீன நிறுவனமான விவோ தனது புதிய ஸ்மார்ட்போனான ‘வி15 ப்ரோ’ மாடலை இந்தியாவில் வெளியிட்டுள்ளது.


Advertisement

இந்தியாவில் வாடிக்கையாளர்களின் வரவேற்பை பெற்ற ஸ்மார்ட்போன்களில் விவோவும் குறிப்பிடத்தக்கது. இந்திய சந்தையில் நிலவும் கடும் போட்டியின் காரணமாக இந்நிறுவனமும் அவ்வப்போது புதிய வசதிகளுடன் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், ‘வி15 ப்ரோ’ ஸ்மார்ட்போனை இன்று இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 9.0 பெய் இயங்குதளத்துடன் செயல்படும். இரட்டை நேனோ சிம் வசதியுடன், 6.4 இன்ச் டிஸ்ளே கொண்டுள்ளது. 6 ஜிபி ரேம் மற்றும் 128 இண்டெர்நல் ஸ்டோரேஜ் மெமரி இதில் வழங்கப்பட்டுள்ளது.


Advertisement

கேமராவை பொருத்தவரையில் 48 மெகா பிக்ஸல் சென்ஸார் கேமரா, 8 எம்பி மற்றும் 5 எம்பி கேமராக்கள் என பின்புறத்தில் மொத்தம் 3 கேமராக்களை கொண்டுள்ளது. அத்துடன் 32 எம்பி செல்ஃபி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த செல்ஃபி கேமராவின் சிறப்பு என்னவென்றால், பாப்-அப் வசதி கொண்டிருப்பது. ஃபுல் டிஸ்ப்ளே மேல் முகப்பில் இந்த கேமரா இல்லாமல், செல்போன் மேல்பகுதியின் உள்புறம் அமைத்திருக்கும். போட்டோ எடுக்கும்போது மேல்பகுதிக்கு வெளிவரும். இந்திய மதிப்பில் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.28,990 ஆகும். இதில் 3700 எம்.ஏ.எச் திறன் கொண்ட பேட்டரி உள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement