முதலிடத்தில் நீடிக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பத்தாவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கான புள்ளிகள் பட்டியலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.


Advertisement

கவுதம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா அணியும், ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை இண்டியன்ஸ் அணியும், 5 போட்டிகளில் விளையாடி, தலா நான்கில் வெற்றி பெற்றுள்ளன. எனினும் ரன் விகித அடிப்படையில் கொல்கத்தா அணி முன்னிலை பெற்றுள்ளது. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, 6 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. டெல்லி அணி 4 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் இருக்கிறது. ‌ கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் தலா இரண்டு வெற்றிகளுடன் ஐந்தாவது மற்றும் ஆறாவது இடங்களில் உள்ளன. 5 போட்டிகளில் விளையாடியுள்ள ரைசிங் புனே அணி , 4 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் இருக்கிறது. ஒரு போட்டியில்‌ மட்டும் வெற்றி பெற்றுள்ள குஜராத் லயன்ஸ் அணி, கடைசி இடத்தில் உள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement