பிப்ரவரி 26 அன்று விசாரணைக்கு வருகிறது அயோத்தி வழக்கு  

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அயோத்தி வழக்கு, உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு முன் பிப்ரவரி 26ம் தேதி விசாரணைக்கு வருகிறது. 


Advertisement

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமஜென்ம பூமி வழக்கை விசாரித்து வந்த அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2010 ம் ஆண்டு தீர்ப்பளித்தது. அதில், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அஹாரா, ராம் லல்லா ஆகிய 3 தரப்பும் சரிசமமாக பங்கிட்டுக்கொள்ள உத்தரவிட்டது. இதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் 14 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இம்மனுக்கள் மீதான விசாரணை கடந்த ஜனவரி 29ம் தேதி நடைபெற்றது. பின்னர், தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. 

இந்த வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில், நீதிபதிகள் எஸ்.ஏ பாப்டே, என்.வி ரமணா, யுயு லலித், சந்திரசூட் ஆகியோரை கொண்ட அமர்வு விசாரிக்கும் என முதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், வழக்கிலிருந்து சொந்த காரணங்களுக்காக யு யு லலித் விலகினார். பின்னர், நீதிபதிகள் அசோக் பூஷண், அப்துல் நசீர், எஸ்.ஏ.போப்டே, டி.ஒய்.சந்திரசத் ஆகியோர் கொண்ட அமர்வினை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அறிவித்தார். 


Advertisement

             

இந்நிலையில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு, பிப்ரவரி 26ம் தேதி அயோத்தி வழக்கை விசாரணைக்கும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதாவது அடுத்த வாரம் செவ்வாய்கிழமை காலை 10.30 மணிக்கு இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.

loading...

Advertisement

Advertisement

Advertisement