சென்னை பூவிருந்தவல்லியில் வெளி மாநிலங்களிலிருந்து மினி வேனில் மூட்டை,மூட்டையாக கடத்தி வரப்பட்ட 5 டன் குட்கா பான்மசாலவை காவல் துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை பூவிருந்தவல்லி-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் சொந்தமான குடோன்கள் ஏரளமாக உள்ளன. இங்கு 50 க்கும் மேற்பட்ட குடோன்கள் வெளி மாநிலத்தவர்கள் வாடகைக்கு எடுத்துள்ளனர். இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் இருந்து குட்கா,பான்மசாலா போன்ற போதைப்பொருள்கள் கடத்தி வரப்படுவதாக பூவிருந்தவல்லி காவல் துறையினருக்கு தகவல் கிடைத்ததுள்ளது.
(File photo)
இதையடுத்து பூவிருந்தவல்லி குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் அலமேலு தலைமையில் பூவிருந்தவல்லி-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காவல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது குஜராத் வாகன பதிவெண் கொண்ட 2 ஈச்சர் வேனில் இருந்து மினி வேனில் பான்மசலா பொருட்களை மாற்றுவதை கண்ட காவல் துறையினர் அவர்களை சுற்றி வளைத்தனர். ஆனால் சம்பவ இடத்திலிருந்து 3 க்கும் மேற்பட்ட நபர்கள் தப்பி சென்றனர்.
பின்னர் காவல்துறையினர் குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஈச்சர் வேன் ஓட்டுனர்கள் ஜோதிந்ராதேவ் (44),மிஷான்பாவஷெதன்(48) ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும் இரண்டு ஈச்சர் வேனில் இருந்து மூட்டை,மூட்டையாக 5 டன் எடையுள்ள மாவா,பான்மசாலாவிற்கான மூலப்பொருட்களை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்களின் மதிப்பு சுமார் 20 லட்சம் மதிப்பிலானது என்று காவல்துறையினர் கூறுகின்றனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 வேன் மற்றும் ஒரு மினி வேனையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். பான்மசாலா பறிமுதல் செய்யப்பட்ட அதே பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு 10 டன் குட்கா போதைப்பொருளை பறிமுதல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
“தமிழக இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது” - ராகுல் காந்தி
குடியரசு தின அணிவகுப்பில் வீறு நடை போட உள்ள வங்கதேச ராணுவ படை!
"அந்த வாய்ப்பு மட்டும் கிடைத்தால் அது ஒரு வரம்”- வாஷிங்டன் சுந்தர்
அதிமுகவிற்கு பிரேமலதா விஜயகாந்த் நிபந்தனை?
சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது: விக்டோரியா மருத்துவமனை தகவல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!