அதிமுக-பாஜக கூட்டணி தோற்பது உறுதி: வைகோ

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

எத்தனை கட்சிகளோடு கூட்டணி வைத்தாலும், அதிமுக-பாஜக கூட்டணி தோற்பது உறுதி என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.


Advertisement

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் புதிய தலைமுறைக்கு பிரத்யேக பேட்டியளித்த அவர், காவிரி, முல்லைப்பெரியாறு, நீட் என அனைத்து விவகாரங்களிலும் தமிழகத்துக்கு தொடர்ந்து துரோகங்களை மட்டுமே புரிந்துவரும் பாஜகவுடன், அதிமுக கூட்டணி சேர்ந்துள்ளதாக விமர்சித்தார்.


Advertisement

கஜா புயலால் 89 பேர் தமிழர்கள் இறந்ததற்கு ஒரு வார்த்தை அனுதாபம் கூட தெரிவிக்காதவர் பிரதமர் நரேந்திர மோடி எனக் கூறிய வைகோ, மோடி தலைமையிலான பாஜக அரசு சுதந்திர இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் தமிழகத்திற்கு மிகப்பெரிய வஞ்சகங்களை செய்து வருவதாக குற்றஞ்சாட்டினார். பணபலம், அதிகார பலம் ஆகியவற்றை பயன்படுத்தி வெற்றி பெற்றுவிடலாம் என அதிமுக கூட்டணி நினைப்பதாக கூறிய அவர், அதனை முறியடித்து திமுக அணி வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

தமிழகத்தில் தற்போது வரை அதிமுக-பாஜக-பாமக ஆகிய கட்சிகள் மக்களவைத் தேர்தல் கூட்டணியை உறுதி செய்துள்ளன. அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகளும், பாஜகவிற்கு 5 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

loading...

Advertisement

Advertisement

Advertisement