ஓவியா நடிப்பில் உருவாகியுள்ள 90 ML திரைப்படம் வெளியாகும் தேதி மாற்றப்பட்டுள்ளது.
பெண் இயக்குநர் அனிதா உதீப் இயக்கத்தில் நடிகை ஓவியா நடித்துள்ள திரைப்படம் ‘90 எம்.எல்’. அடல்ட் காமெடியாக இந்தத் திரைப்படம் உருவாகியுள்ளது. ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா நடித்து வெளியாகவுள்ள திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு உருவான நிலையில் இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது.
ஆபாச வசனங்கள், முத்தக்காட்சிகள் என ட்ரெய்லர் பல்வேறு விமர்சனங்களை சந்தித்தது. ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களிடையே நல்ல பெயர் வாங்கிய ஓவியா, இது போன்ற அடெல்ட் படங்களில் நடிப்பதை தற்போது தவிர்த்து இருக்கலாம் என பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். விமர்சனங்களுக்கு பதிலளித்த ஓவியா, விதையை வைத்தே பழத்தின் ருசியை தீர்மானிக்காதீர்கள் என்று பதிலளித்தார். இந்த திரைப்படம் வரும் 22 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.
இந்நிலையில் தொழில்நுட்ப காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு மீண்டும் அறிவித்தது. அதன்படி 90 M L திரைப்படம் மார்ச் மாதம் 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஓவியா, தொழில்நுட்ப காரணங்களால் 90M L திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மார்ச் 1ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. திட்டமிட்டப்படி மார்ச்1ம் தேதி காலை 5 மணி காட்சியில் உங்களை சந்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் ஆர்ஜே பாலாஜியின் எல்கேஜி திரைப்படத்துக்கும், உதயநிதி ஸ்டாலினின் கண்ணே கலைமானே படத்துக்கும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்