"பாமக தொகுதிகள் என்னவென்பது பின்னர் அறிவிக்கப்படும்" ராமதாஸ்

PMK-constituency-will-announce-later--Ramadoss

அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடும் தொகுதிகள் என்னவென்பது பின்னர் அறிவிக்கப்படும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


Advertisement

வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக- பாமக இடையேயான கூட்டணி உறுதியாக உள்ளது. அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 7 மக்களவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுதவிர ஒரு மாநிலங்களவை தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுது. அதேநேரம் தமிழகத்தில் காலியாக உள்ள 21 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு பாமக முழு ஆதரவு கொடுக்கும் என இரண்டு கட்சிகளுடனான கூட்டணி ஒப்பந்தத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.


Advertisement

இந்நிலையில் அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடும் தொகுதிகள் என்னவென்பது பின்னர் அறிவிக்கப்படும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், “அதிமுக உடன் கூட்டணி வைப்பதற்காக மக்கள் நலன்கள் சார்ந்த 10 கோரிக்கைகளை நாங்கள் முன்வைத்தோம். அதாவது 7 தமிழர்களின் விடுதலை, நீர்ப்பாசன திட்டம், சாதிவாரிய கணக்கெடுப்பு, படிப்படியான மதுக்கடைகள் மூடல், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்துள்ளோம். அதனை நிறைவேற்றுவதாக முதலமைச்சர், துணை முதலமைச்சர் கூறியுள்ளார். அதனடிப்படையில் கூட்டணி முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement