"இந்தியாவிலேயே சென்னையில்தான் சிசிடிவி கேமராக்கள் அதிகம்" ஏ.கே.விஸ்வநாதன்

Chennai-has-installed-highest-CCTV-camera-in-India-says-commissioner-A-K-vishwanathan

இந்தியாவிலேயே அதிகளவு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது சென்னையில் தான் என மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.


Advertisement

சென்னை பரங்கிமலை காவல் மாவட்ட எல்லைக்குட்பட்ட சேலையூர் சரகத்தில் 770 சிசிடிவி கேமரா பயன்பாட்டை சென்னை கமிஷ்னர் ஏ.கே.விஸ்வநாதன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கூடுதல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால், சென்னை தெற்கு இணை ஆணையர் மகேஸ்வரி, பரங்கிமலை துணை ஆணையர் முத்துச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர். 


Advertisement

பின்னர் பேசிய சென்னை மாநகர காவல் ஆணையர்  ஏ.கே.விஸ்வநாதன், “அதிகளவில் சிசிடிவி கேமராக்கள் இருப்பதால் செல்போன் பறிப்பு, செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றங்கள் குறைந்துள்ளன. செல்போன் பறிப்பில் ஈடுபடுவோர் வெளி மாநிலங்களில் செல்போனை விற்பனை செய்கிறார்கள். சிசிடிவியால் உண்மையான குற்றவாளிகள் பிடிபடுகிறார்கள். டிஜிகாப் ஆப் மூலம் தொலைந்த செல்போன்களை ஐ.எம்.இ.ஐ எண் மூலம் கண்டிபிடிக்கலாம். சிசிடிவியால் உடனுக்குடன் குற்றவாளிகளை கண்டிபிடிப்பதால் குற்றவாளிகள் பயப்படுகிறார்கள். 

மேலும் சிசிடிவி பொருத்துவதால் மக்கள் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கின்றனர். சட்டம் ஒழுங்கில் பாதுகாப்பான நகரமாக சென்னை விளங்குகிறது. இந்தியாவிலேயே சிசிடிவி கேமரா அதிகளவில் பொருத்தியது சென்னையில் தான், இதன் பெரும்பங்கு பொதுமக்களால் தான் அவர்களுக்கு என் நன்றியை தெரிவிக்கிறேன். அத்துடன் சிசிடிவி கேமரா பொருத்த உதவிய அனைத்து காவல்துறை அதிகாரிகளையும் பாராட்டுகிறேன்” எனக் கூறினார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement