உலகக் கோப்பைக்கு இன்னும் 100 நாள் : குல்தீப் தலைமையில் இந்தியா பவுலிங்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை நடைபெற இன்னும் 100 நாட்களே உள்ளன.


Advertisement

ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான உலகக் கோப்பை 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. இந்தக் கோப்பையை வெல்லும் அணி அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு நடப்பு சாம்பியனாக திகழும். இதனால் இந்தக் கோப்பையை வெல்வதையே பெரும் இலக்காக அனைத்து கிரிக்கெட் அணிகளும் கருதுகின்றன. கடந்த 2015ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக் கோப்பையை ஆஸ்திரேலிய அணி வென்றது. அதற்கு முன்னர் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையை இந்தியா வென்றது. இந்தியா மொத்தம் இரண்டு முறை உலகக் கோப்பையை வென்றுள்ளது.


Advertisement

இந்த ஆண்டு உலகக் கோப்பை போட்டி இங்கிலாந்தில் நடைபெறுகிறது. இதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தீவிரமாக தயாராகி வருகிறது. போட்டி இங்கிலாந்தில் நடைபெறுவதால் அங்கு இங்கிலாந்து அணி முழு பலத்துடன் இருக்கும் எனப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்ரிக்கா உள்ளிட்ட பலத்துடன் இருக்கும்.

இந்தியா சமீபத்தில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதால் மைதானங்கள் பழக்கப்பட்டதாக இருக்கும். குறிப்பாக குல்தீப் யாதவின் சுழற்பந்துவீச்சு இந்தியாவிற்கு பெரும் பலமாக கருதப்படுகிறது. இதனால் விராட் கோலி அணியின் தலைமையில் பவுலிங்கிற்கு மட்டும் குல்தீப் யாதவிற்கு முழு சுதந்திரம் கொடுத்து, அவரை அதற்கு தலைமை ஏற்க வைக்க திட்டமிட்டுள்ளார். 
 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement