இதற்காகத்தான் ’இந்தியன் 2’ படத்தை மறுத்தாரா அஜய்தேவ்கன்?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

’இந்தியன் 2’ படத்தில் நடிக்காதது ஏன் என்று பிரபல இந்தி ஹீரோ அஜய்தேவ்கன் விளக்கம் அளித்துள்ளார்.


Advertisement

ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன், மனீஷா கொய்ராலா, ஊர்மிளா மடோன்கர், சுகன்யா உட்பட பலர் நடித்த படம், ‘இந்தியன்’. 1996 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை, இப்போது ஷங்கர் இயக்குகிறார்.


Advertisement

கமல்ஹாசன் ஜோடியாக, காஜல் அகர்வால் நடிக்கிறார். மற்றும் சுஸி பே, நெடுமுடி வேணு, ஆர்.ஜே.பாலாஜி, யோகிபாபு உட்பட பலர் நடிக்கின்றனர். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்கி நடந்துவருகிறது. ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசை அமைக்கிறார்.

இந்த படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க பிரபல இந்தி ஹீரோவும் நடிகை கஜோலின் கணவருமான அஜய்தேவ்கனிடம் பேசினர். அவர் நடிகக் மறுத்துவிட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இதுபற்றி அஜய்தேவ்கனிடம் கேட்டபோது, தன்னிடம் நடிக்க கேட்டது உண்மைதான் என்றார்.


Advertisement

’’ஷங்கர் இயக்கத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். ’இந்தியன் 2’ படத்துக்கு உடனடியாக கால்ஷீட் வேண்டும் என்று கேட்டனர். தற்போது வேறு படங்களில் நடித்துவருவதால் உடனடியாக என்னால் கால்ஷீட் கொடுக்க முடியவில்லை. நெகட்டிவ் கேரக்டர் என்பதால் நடிக்கவில்லை என்று கூறப்படுவதை ஏற்கமாட்டேன். நான் இந்தியில், காக்கி, கம்பெனி படங்களில் வில்லனாக நடித்திருக்கிறேன். அதோடு, ’இந்தியன் 2’ படத் தில் என்ன கேரக்டரில் நடிக்க என்னை அழைத்தார்கள் என்பதை வெளிப்படுத்தும் எண்ணமில்லை’’ என்றார். 


 

loading...

Advertisement

Advertisement

Advertisement