தமிழக அரசு அதிகாரிகளுக்கு 2 மில்லியன் டாலர் லஞ்சம் : ஐ.டி நிறுவன நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டு

2-US-Executives-Charged-For-Alleged--2-Million-Bribe-To-Tamil-Officials

சென்னையில் கட்டடம் கட்டுவதற்கான அனுமதி பெறுவதற்காக அரசு அதிகாரிகளுக்கு ரூ.2 மில்லியன் லஞ்சம் கொடுத்ததாக ஐ.டி நிறுவனத்தின் இரு முன்னாள் நிர்வாகிகள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.


Advertisement

தனியார் ஐ.டி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கோர்டான் கோபர்ன் (55) மற்றும் முன்னாள் தலைமை சட்ட அதிகாரி ஸ்டீவன் ஸ்வார்ட்ஷ் (51) ஆகியோர் மீது லஞ்சம் கொடுத்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் தலைநகரமான நியூயார்க்கில் உள்ள ஃபெடெரல் நீதிமன்றத்தில் கோபர்ன் மற்றும் ஸ்டீவன் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அமெரிக்க வழக்கறிஞர்கள் புகாரை பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் தாக்கல் செய்துள்ள மனுவில், சென்னை சோலிங்கநல்லூரில் நிறுவனத்தின் கட்டுமான அனுமதி பெறுவதற்காக 2 மில்லியன் டாலர் லஞ்சம் கொடுத்ததாகவும், தெரிவித்துள்ளனர். 

Image result for it building construction


Advertisement

ஆனால் அவர்கள் லஞ்சம் கொடுத்த அதிகார்கள் மற்றும் கட்டுமான நிறுவனம் எது என்பதை அடையாளம் காணவில்லை என தெரிவித்துள்ளனர். வெளிநாடு ஊழல் விதிமுறை சட்டத்தை மீறுதல், போலியான ஆவணங்களை தாக்கல் செய்தல் உள்ளிட்ட 12 குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த விதிமீறல்களுக்காக தனியார் ஐ.டி நிறுவனத்திற்கு பத்திர மற்றும் பரிவர்த்தனைத்துறை 25 மில்லியன் டாலர் அபராதம் விதித்துள்ளது. 

அத்துடன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த மனுவில், 2011ஆம் ஆண்டு சென்னையில் நிறுவனத்தை கட்ட முயன்று தனியார் ஐ.டி நிறுவனம் விண்ணப்பித்ததாகவும், 14 மாதங்கள் வரை அதற்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர், கட்டடம் கட்டுவதற்கான சில நிபந்தனைகள் இருப்பதகாவும், ஒப்புதல் பெறுவதற்காக அது மற்றொரு நிறுவனத்திற்கு கைமாற்றம் செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்பின்னர், 2014ஆம் ஆண்டு கட்டுமானப் பணியின் ஒப்பந்ததாரர் தமிழக உயர் அரசு அதிகாரிகள் சிலரை பார்க்க வேண்டும் என தெரிவித்ததாக சொல்லப்பட்டுள்ளது. அதற்கு அந்த தனியார் ஐ.டி நிறுவனம் மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுள்ளது. 


Advertisement

அத்னபின்னர் கோபர்ன் மற்றும் ஸ்டீவன் ஆகியோரிடம் ரூ.2 மில்லியன் டாலரை கொடுக்குமாறும், பல அதிகாரிகளுக்கு அதை லஞ்சமாக கொடுக்க வேண்டும் என ஒப்பந்ததாரர் கேட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த 2 மில்லியன் டாலரை கொடுத்த பின்னரே, கட்டடத்திற்கான கட்டுமானப் பணியின் ஒப்புதல் பெறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுளது. பின்னர் லஞ்சம் கொடுத்ததை மறைத்து போலியான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement