காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் இருந்து நேற்றுமுன் தினம் 78 வாகனங்களில் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையினர் பயணம் செய்தனர். அப்பொழுது, திடீரென ஆதில் என்ற பயங்கரவாதி மூலம் ராணுவ வீரர்கள் வாகனம் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 2 பேர் உட்பட 40 துணை ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு முன் நிதின் ராதோர் என்ற துணை ராணுவ வீரர் எடுத்த செல்ஃபியும் அவரது கடைசி தொலைபேசி அழைப்பும் மனதை நெகிழவைத்துள்ளது. இந்த செல்ஃபி படத்தை நிதின் தமது சிஆர்பிஎப் சீருடையில் அவர் செல்லவிருந்த வாகனத்திற்கு முன்பு நின்று எடுத்துள்ளார். இவர் மகாராஷ்டிரா மாநிலத்தின் புல்தானா மாவட்டத்திலுள்ள சோர்பாங்கரா கிராமத்தை சேர்ந்தவர். 36 வயதான இவருக்கு சுஷ்மா என்ற மனைவியும், ஜே(Jay) என்ற 10 வயது மகனும் உள்ளனர். நிதின் ராதோர் 15 ஆண்டுகள் சிஆர்பிஎப் வீரராக பணிபுரிந்துள்ளார்.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தான் ஜம்மு காஷ்மீருக்கு நிதின் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த பயங்கரவாத தாக்குதல் நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்புதான் அவர் தனது மனைவியை தொலைபேசியில் அழைத்து காய்ச்சலால் அவதிபட்டிருக்கும் அவரது மகன் ஜே-வை விசாரித்திருக்கிறார். அவரின் கடைசி செல்ஃபியும், கடைசி அழைப்பும் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.
இந்த தாக்குதலில் உயிரிழந்த பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த குல்விந்தர் சிங்கிற்கு கடந்த ஜனவரி மாதத்தில் தான் திருமணம் நிச்சியிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அவரது இறப்பு செய்தி அவரது குடும்பத்தை ஆழ்ந்த சோகத்தில் மூழ்கடித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் ரவுலி கிராமத்தைச் சேர்ந்தவர் குல்விந்தர் சிங். 28 வயதான இவருக்கும் லோதிப்பூர் கிராமத்தை சேர்ந்த பெண்ணிற்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. அவர்கள் இருவருக்கும் இந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடக்கயிருந்தது.
குல்விந்தர் குடும்ப வறுமையின் காரணமாக படிப்பை தொடர முடியாமல் போனது. கடந்த 2014 ஆம் ஆண்டு சிஆர்பிஎஃப்பில் சேர்ந்தார். இவர் விடுப்பு முடிந்து ஊர் திரும்பும் முன் அவர் தந்தையிடம் பேசிய கடைசி உரையாடலை கேட்டால் அனைவருக்கும் கண்களில் கண்ணீர் ததும்பும். அவர் தனது தந்தையிடம், ‘நான் அக்டோபர் மாதம் நான் திரும்பிவந்துவிடுவேன் ஏனென்றால், நீங்கள் தனியாக திருமண வேலைகள் அனைத்தையும் செய்ய முடியாது. அதனால் நான் சீக்கிரம் வந்து உங்களுக்கு துணையாக இருப்பேன்’ என கூறியிருந்தார்.
Loading More post
PTExclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும் தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
ஜெயலலிதா நினைவு இல்லம் ஜன.28ல் திறப்பு - தமிழக அரசு
9 நாட்களில் 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி - மத்திய அரசு
டிராக்டர் பேரணி: ட்விட்டர் மூலம் குழப்பத்தை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி - உளவுத்துறை
சூடு பிடிக்கும் அரசியல்களம்; அடுத்தக்கட்டத்தில் விவசாயிகள் போராட்டம்.. முக்கியச் செய்திகள்
PTExclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும் தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?