[X] Close >

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த பாதிரியாருக்கு 20 வருட சிறை!

Kottiyoor-rape-case--Fr--Robin-Vadakkumchery-gets-60-yrs-imprisonment

பிளஸ் ஒன் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட பாதிரியாருக்கு, 20 வருட சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


Advertisement

கேரள மாநிலம் கண்ணூர் வடக்கன்சேரியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் பாதிரியாராக இருந்தவர் ராபின் மாத்யூ என்ற ராபின் வடக்கன்சேரி. இவர் அங்குள்ள பள்ளியில் மேலாளராகவும் இருந்தார். இந்நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டு, அந்தப் பள்ளியில் படித்த பிளஸ்-1 மாணவி ஒருவர், பாதிரியார் ராபின் வடக்கன்சேரியால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். 2017 ஆம் ஆண்டு அந்த மாணவிக்கு குழந்தையும் பிறந்தது. இதனால் இந்த விவகாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Advertisement

இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் பாதிரியார் ராபின் வடக்கன்சேரி பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது. இதைத் தொடர்ந்து அவர் வெளிநாடு தப்பிச்செல்ல இருந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.

பாலியல் வன்கொடுமை, மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லைக் கொடுத்தது உட்பட 3 வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கை தலச்சேரி போஸ்கோ நீதிமன்றம் விசாரித்து வந்தது. நீதிபதி பி.வி.வினோத் இன்று வழங்கிய தீர்ப்பில், ஒவ்வொரு வழக்குக்கும் தலா 20 வருட சிறை தண்டனை வழங்கினார். ஆக மொத்தம் 60 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், மூன்றையும் ஒரே நேரத்தில் அனுபவிக்க வேண்டும் என்பதால், 20 ஆண்டுகள் மட்டுமே அவர் சிறையில் இருக்க வேண்டியிருக்கும். ரூ.3 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதத் தொகையில் ரூ.1.5 லட்சத்தை பாதிக்கப்ப ட்ட மாணவிக்கு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார். 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close