பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் பாதுகாப்புப் படைகளுக்கு அனைவரும் பக்கபலமாக இருப்போம் என அனைத்துக் கட்சிகளும் உறுதிபடக் கூறியுள்ளன.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையினர் சென்ற வாகனங்கள் மீது நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர். இந்த கொடூரத் தாக்குதலில் 40 வீரர்கள் உயிர்த் தியாகம் செய்தனர். இந்த தாக்குதலுக்கு பிரதமர், முதலமைச்சர்கள், எதிர்கட்சித்தலைவர்கள், நடிகர்கள் என பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இதுதொடர்பாக விவாதிக்க டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அதில், பயங்கரவாத தாக்குதல் குறித்து 3 தீர்மானங்கள் அதில் நிறைவேற்றப்பட்டன. நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டைக் காப்பதில் அரசுடன் தாங்கள் இணைந்து செயல்பட உள்ளதாக கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
40 வீரர்கள் உயிரிழக்கக் காரணமான பயங்கரவாத தாக்குதலுக்கு கடுமையான கண்டனம் தெரிவிப்பதாகவும் உறவை இழந்து வாடும் குடும்பத்தினரின் வேதனையில் பங்கேற்பதாகவும் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. பயங்கரவாதத்தை அதன் எல்லா வடிவிலும் எதிர்ப்பதுடன் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு அளிக்கப்படும் ஊக்கத்தையும் எதிர்ப்பதாகவும் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
30 ஆண்டுகளாக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் இந்தியா பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எல்லைதாண்டி வரும் சவால்களை இந்திய படைகள் உறுதிபட எதிர்கொண்டு வருவதாகவும் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட ராணுவ உயரதிகாரிகள் தாக்குதல் நடந்த விதம் குறித்து கட்சித் தலைவர்களுக்கு விளக்கினர்.
Loading More post
அரை சதம் விளாசிய ரோகித் - கடைசி ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்த கோலி!
”தமிழர்களின் துடிப்பான பண்பாடு உலக அளவில் புகழ் பெற்றது” – பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!
பாலியல் புகார் எதிரொலி : கட்டாய காத்திருப்பு பட்டியலில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மார்ச் 1 முதல் தடுப்பூசி!
ஆறு விக்கெட்டுகளை அள்ளிய அக்ஸர் பட்டேல் - இங்கிலாந்து 112 ரன்னில் ஆல் அவுட்!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!