மதுரை விமான நிலையம் வந்த தமிழக வீரர் சுப்பிரமணியன் உடலுக்கு, ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் இருந்து நேற்றுமுன் தினம் 78 வாகனங்களில் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையினர் பயணம் செய்தனர். புல்வாமா மாவட்டத்தில் அவர்கள் வாகனம் வந்தபோது, தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் தமிழகத்தை சேர்ந்த சிவசந்திரன், சுப்பிரமணியன் ஆகியோர் உட்பட 44 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலை பாகிஸ் தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பு செயல்படுத்தியுள்ளது.
இந்தக் கொடூரத் தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் சமூக வலைத்தளங்களில் மக்கள் கோபத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வீரமரணம் அடைந்த, அரியலூர் கார்குடியை சேர்ந்த சிவச்சந்திரன், சவலாப்பேரியைச் சேர்ந்த சுப்பிரமணியன் உடல்கள் திருச்சி விமான நிலையத்துக்கு வந்தன. டெல்லியில் இருந்து தனி விமானத்தில் அவர்கள் உடல்கள் திருச்சிக்கு வந்து சேர்ந்தன. அங்கிருந்து சுப்பிர மணியனின் உடல் மதுரைக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டது.
திருச்சி விமான நிலையத்தில் அரியலூர் சிவச்சந்திரன் உடலுக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மா சீதாராமன் அஞ்சலி செலுத்தி னார். முப்படை அதிகாரிகள், காவல்துறையினர் வீர வணக்கம் செலுத்தினர். சிவச்சந்திரனின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பொதுமக்களும் திரளாக வந்திருந்து அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து மதுரை விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்த சுப்பிரமணியன் உடல், அங்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாலகிருஷ்ணன் உட்பட பலர் அவர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அரசு அதிகாரிகளும் அஞ்சலி செலுத்தினர். காவலர்கள் வீரவணக்கம் செலுத்தியதை அடுத்து அவரது சொந்த ஊரான சவலாபேரிக்கு உடல் கொண்டு செல்லப்படுகிறது.
Loading More post
சாலமன் பாப்பையா உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்
மறைந்த பாடகர் எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு
சசிகலா நாளை மறுநாள் விடுதலையாகிறார்: டிடிவி தினகரன்
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
கொரோனா பரவல் அச்சம்: குடியரசுதின கிராம சபைக் கூட்டம் ரத்து
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
லாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்