ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் இளம் வீரர் மயங்க் மார்கண்டேவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
முதல் சர்வதேச போட்டியில் களமிறங்கும் மயங்க் மார்கண்டே மீது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏனெனில் 2018 ஐபிஎல் தொடரில் அவரின் அற்புதமான பந்துவீச்சுதான் அதற்கு காரணம். வலக்கை சுழற்பந்து வீச்சாளரான இவர், கடந்த ஐபிஎல் தொடரில், 14 போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்களை சாய்த்து இருந்தார். 2018ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இவர் மும்பை இண்டியன்ஸ் அணிக்காக 20 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனார்.
ஐபிஎல் தொடரில் இவரது கூக்ளி பந்துவீச்சு மிகவும் பிரபலமானது. அதுவும், சிஎஸ்கே கேப்டன் தோனியை தன்னுடைய கூக்ளி பந்துவீச்சு மூலம் அவுட் ஆக்கினார். சமீபத்தில் இங்கிலாந்து ஏ அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற மயங்க் மார்கண்டே எடுத்த 5 விக்கெட்கள் முக்கியமான காரணம்.
7 முதல் தரப் போட்டிகளில் விளையாடி 34 விக்கெட்களையும், இந்திய ஏ அணிக்காக 22 போட்டிகளில் விளையாடி 45 விக்கெட்களையும் சாய்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
குடல் இறக்க அறுவை சிகிச்சை முடிந்து முதல்வர் பழனிசாமி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்!
முக்கியச் செய்திகள்: அச்சுறுத்தும் கொரோனா 2-ம் அலை முதல் சென்னை அணியின் வெற்றி வரை
தடுப்பூசி குறித்த சர்ச்சை கருத்து - மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு
6 லட்சம் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் இன்று சென்னை வருகை!
ஜடேஜா -மொயின் அலி அசத்தல் பந்துவீச்சு! ராஜஸ்தானை 45 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சென்னை!
மேக்ஸ்வெல் வரவு - தொடர் வெற்றி : பெங்களூர் அணியின் ‘ஈ சாலா கப் நம்தே’ கனவு பலிக்குமா?
கொரோனா 2-ம் அலையின் மோசமான பாதிப்பை இந்தியா தடுக்கத் தவறியது எப்படி? - ஒரு பார்வை
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா? - ஒரு பார்வை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்