புல்வாமா தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்கள் கண்டிப்பாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்று பஞ்சாப் மாநில அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் இருந்து நேற்று 78 வாகனங்களில் 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையினர் பயணம் செய்துகொண்டிருந்தனர். புல்வாமா மாவட்டத்தில் அவர்கள் சென்றுகொண்டிருந்தபோது, நேற்று தற்கொலைத் தாக்குதல் நடத்தியது. இதில் 44 வீரர்கள் உயிர்த் தியாகம் செய்தனர்.
இதில் தமிழகத்தை சேர்ந்த இருவரும் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு இந்திய மக்கள், இந்த தாக்குதலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதற்குப் பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் கோபத்துடன் பதிவிட்டு வருகின் றனர்.
இந்நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரரும் பஞ்சாப் மாநில அமைச்சருமான நவ்ஜோத் சித்து கூறும்போது, ‘’இது கோழைத்தனமான செயல். இது கண்டிக்கத்தக்கது. இதற்கு பேச்சுவார்த்தை மூலம் நிரந்தரமான தீர்வு காணவேண்டும். தீவிரவாதத்துக்கென்று எந்த நாடும் இல்லை, மதமு ம் இல்லை. இன்னும் எவ்வளவு காலம் நம் வீரர்கள், வாழ்க்கையை தியாகம் செய்வார்கள்? இன்னும் எவ்வளவு காலம்தான் இந்த ரத்த வெறி தொடரும்? இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவர்கள் கடுமையாக, கண்டிப்பாகத் தண்டிக்கப்பட வேண்டு ம்’’ என்றார்.
Loading More post
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது? - ஒரு பார்வை
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி