காஷ்மீர் தாக்குதல் : வீரமரணம் அடைந்த தூத்துக்குடி வீரர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த 40 பேரில், தூத்துக்குடியை சேர்ந்த வீரரான சுப்ரமணியன் வீரமரணமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement

காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் இருந்து நேற்று 78 வாகனங்களில் ‌2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மத்திய ரிசர்வ் பாது‌காப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. விடுப்பில் சொந்த ஊர் சென்று, பின் மீண்டும் பணியில் சேர வந்த வீரர்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. 350 கிலோ வெடிபொருட்களை கொண்டு நடத்தப்பட்ட இந்த தற்கொலைப்படை தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர். 


Advertisement

இந்த தாக்குதலில் தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சவலாப்பேரியை கணபதி என்பவரது மகன் சுப்ரமணியன் என்பவரும் வீர மரணமடைந்துள்ளார். அவரது தந்தை மற்றும் தாய்க்கு இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் அவரது குடும்பத்தினர் கலக்கத்தில் உள்ளனர்.

தூத்துக்குடி ஆட்சியரிடம் கேட்டபோது, “மாவட்ட நிர்வாகத்திற்கு இதுவரை தகவல் எதுவும் சொல்லப்படவில்லை. சி.ஆர்.பி.எப் மூலம் அவரது குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்படும். அரசு  தரப்பில் நிர்வாகத்திடம் தெரிவித்த பின்னர், அரசு  மரியாதை செலுத்த செல்வேன்” என்றார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement