மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியை பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி மீண்டும் விமர்சித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் இடையே கூட்டணி ஏற்பட வாய்ப்புள்ளதாக பேசப்பட்டது. பேச்சுவார்த்தையும் நடைபெற்று வந்ததாக செய்திகள் வெளியானது. தொகுதிகள் பங்கீட்டில் உடன்பாடு எட்டாததால் 5 மாநில தேர்தலில் மூன்று கட்சிகளும் தனித்தனியாகவே போட்டியிட்டன. இருப்பினும், மக்களவை தேர்தலில் கூட்டாக போட்டியிடுவர் என்று எதிர்பார்ப்பு நிலவியது.
ஆனால், மக்களவை தேர்தலில் உத்தரபிரதேசத்தில் தனித்து போட்டியிடுவது என்று அகிலேஷ் யாதவும், மாயாவதியும் கூட்டாக அறிவித்தனர். இது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாக கருதப்பட்டது. இதனையடுத்து, பிரியங்கா காந்தி உத்தரப்பிரதேச கிழக்கு பகுதி பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இவரது நியமனத்தால் உத்தரப் பிரதேச அரசியலில் மாற்றங்கள் ஏற்படும் என்று கூறப்பட்டது. காங்கிரஸ் மாயாவதியுடன் பேச்சுவார்த்தை நடத்தி சம்மதிக்க வைத்தால் அகிலேஷ் பிரச்னை செய்ய மாட்டார் சமாஜ்வாடி மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியை மாயாவதி மீண்டும் விமர்சித்துள்ளார். “பாஜகவைப் போல் காங்கிரஸ் அரசாங்கமும் மத்தியப் பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக தேசிய பாதுகாப்புச் சட்டத்தை பயன்படுத்துகிறார்கள். அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழக மாணவர்கள் 14 பேர் மீது பாஜக அரசு தேசவிரோத வழக்குப் பதிவு செய்துள்ளது. இரண்டு சட்டங்களும் தேசிய பயங்கரவாதம்தான். அது கண்டிக்கக்தக்கது. காங்கிரஸ், பாஜக அரசுகளுக்கு இடையே என்ன வித்தியாசம் என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்” என்று மாயாவதி தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
மாயாவதியின் இந்த விமர்சனம், உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி உடனான கூட்டணிக்காக வாய்ப்பினை கேள்விக்குள்ளாக்கி உள்ளது.
Loading More post
அறுவைசிகிச்சைக்காக சில நாட்கள் ஓய்வு: கமல் அறிவிப்பு
"தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு” -சென்னை வானிலை ஆய்வு மையம்
செங்கல்பட்டு டோல்கேட்: கூட்ட நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்
பாலக்கோட் தாக்குதல் பற்றி முன்பே அறிந்திருந்த அர்னாப்? கசிந்த வாட்ஸ்அப் உரையாடல்
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!