2019 மக்களவை தேர்தலில் போட்டியிடமாட்டேன் என கட்சித் தொண்டர்களிடம் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
2019-ஆம் ஆண்டிற்கான மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி நியமனம் செய்யப்பட்டார். உத்தரப் பிரதேசத்தின் கிழக்கு பிராந்திய காங்கிரஸ் பணிகளை தற்போது அவர் கவனித்து வருகிறார்.
இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோ மற்றும் புல்பூர் மக்களவை தொகுதி காங்கிரஸ் தொண்டர்கள் பிரியங்கா காந்தியை சந்தித்தனர். அப்போது இந்த இரண்டு தொகுதியில் ஏதாவது ஒரு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிட வேண்டும் என அவர்கள் தங்கள் விருப்பத்தை தெரிவித்தனர். இந்த இரண்டு தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சிக்கு வலுவான வேட்பாளர்கள் இல்லை என்றும் அவர்கள் தங்கள் வருத்தத்தை தெரிவித்தனர். இருப்பினும் பிரியங்கா காந்தி 2019-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் போட்டியிட மாட்டேன் என கட்சித் தொண்டர்களிடம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அத்துடன் 2022-ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வதில் கவனத்தை செலுத்தப்போவதாகவும் கூறியுள்ளார்.
தொண்டர்கள் உடனான சந்திப்புக்கு பின் பிரியங்கா காந்தி செய்தியாளர்களிடம் பேசும்போது, கணவர் ராபர்ட் வதேரா மீதான நடவடிக்கை போகும்வரை போகட்டும். தன்னுடைய பணியை தான் தொடர்ந்து செய்ய இருப்பதாக கூறினார்.
பிரியங்கா காந்தியை போட்டியிடுமாறு தொண்டர்கள் கேட்டுக்கொண்ட புல்பூர் தொகுதி காங்கிரஸ் கட்சியின் பராம்பரிய தொகுதியாகவே பார்க்கப்படுகிறது. ஜவஹர்லால் நேரு போட்டியிட்ட தொகுதி என்ற பெருமையும் இத்தொகுதிக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
டெல்லியில் அதிகரிக்கும் கொரோனா: 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு?
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா? - ஒரு பார்வை
"கொல்கத்தாவில் பரப்புரை இல்லை"-மம்தா பானர்ஜி திடீர் முடிவு!
முதல்வர் பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி!
இரவுநேர ஊரடங்கு: தென் மாவட்டங்களுக்கு பகலில் கூடுதல் அரசு பேருந்துகள் இயக்க திட்டம்!
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி