அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜய்காந்த் நாளை மறு நாள் சென்னை திரும்புகிறார்
தேமுதிக தலைவர் விஜயகாந்த், மேல் சிகிச்சைக்காக கடந்த, டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி தனது மனைவி பிரேமலதாவுடன் அமெரிக்கா சென்றிருந்தார். அங்கு அவருக்குப் பல்வேறு சிகிச்சை அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. விஜயகாந்த் உடல் நலம் தேறி, புதிய உத்வேகத் துடன் அரசியலில் மீண்டும் களமிறங்க வேண்டும் என்று அவரது தொண்டர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
இதற்கிடையே, அவர் உடல்நிலை மோசமடைந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவியது. அதை மறுத்த அவர் மகன் விஜய பிரபாகரன், அவர் உடல் நலத்துடன் இருக்கிறார் என்றும் விரைவில் சென்னை திரும்புவார் என்றும் கூறியிருந்தார்.
இதற்கிடையே சிகிச்சை முடிந்து அவர், நாளை மறுநாள் சென்னை திரும்புகிறார். சென்னை வரும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க தேமுதிக நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.
அவர் சென்னை வந்த பின்பு நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்த முடிவை அறிவிப்பார் என்று தெரிகிறது. இதனால் தேமுதிக தொண்டர் கள் உற்சாகமடைந்துள்ளனர்.
Loading More post
சாலமன் பாப்பையா உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்
மறைந்த பாடகர் எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு
சசிகலா நாளை மறுநாள் விடுதலையாகிறார்: டிடிவி தினகரன்
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
கொரோனா பரவல் அச்சம்: குடியரசுதின கிராம சபைக் கூட்டம் ரத்து
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
லாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்