ரஃபேல் போர் விமான விவகாரம் பெரும் விவாதத்துக்கு உள்ளாகியுள்ள நிலையில் ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக சிஏஜி அறிக்கையை மாநிலங்களவைவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பிரான்சிடமிருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் ஒப்பந்தம் பெரும் அரசியல் விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது. மத்திய அரசுக்கு எதிராக இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவடைகிறது. ஏப்ரல், மே மாதங்களில் பொதுத் தேர்தல் வரவுள்ள நிலையில், அதற்கு முந்தைய கடைசி கூட்டத் தொடராகவும் முடிவுக்கு வரயிருக்கிறது. இந்தச் சூழலில், நாடாளுமன்றத்தில் ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான சிஏஜி அறிக்கையை இன்று மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் இந்த முக்கியமான சிஏஜி அறிக்கையை இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்தார். இந்திய அரசியல் சாசனத்தின் 101வது விதிபடி இந்த சிஏஜி அறிக்கை மாநிலங்களவையில் அவர் தாக்கல் செய்தார். 141 பக்கங்கள் கொண்ட இந்த சிஏஜி அறிக்கையை தாக்கல் செய்த பின் இதனை ஏற்க மறுத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற வாளகத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அதில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் என்ன என நாடு முழுவதும் பரவலான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Loading More post
ஏப்ரல் 9ம் தேதி முதல் ஐபிஎல் தொடர் தொடக்கம்?
திருச்சியில் இன்று திமுக பொதுக்கூட்டம்; தொலைநோக்கு திட்டங்களை அறிவிக்கிறார் மு.க.ஸ்டாலின்
நாகர்கோவிலில் இன்று அமித் ஷா பரப்புரை!
தொகுதி பங்கீட்டில் திமுக-காங்கிரஸ் இடையே சுமூக உடன்பாடு; இன்று ஒப்பந்தம் கையெழுத்து!
அனல்பறக்கும் மேற்கு வங்க தேர்தல் களம்.. பிரதமர் மோடி இன்று பிரசாரம்.!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!