பன்னீர் செல்வம் பழைய பல்லவியை பாடுகிறார்: வைகைச் செல்வன்

panneerselvam-speaks-the-old-version-again-says-vaigai-selvan

ஓ.பன்னீர் செல்வம் பழைய பல்லவியையே பாடுகிறார் என அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த வைகைச் செல்வன் கூறியுள்ளார்.


Advertisement

அதிமுகவின் இரு அணிகளும் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த வந்தால் வரவேற்போம் என ஓ.பன்னீர்செல்வம் நேற்று அறிவித்திருந்தார். அவரது கருத்தை வரவேற்பதாக அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த தம்பிதுரை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் கூறினர். இதனிடையே இணைப்பு குறித்துப் பேச்சு நடத்த இரு தரப்பிலும் குழுக்கள் அமைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர் செல்வம், சசிகலா குடும்பம் தவறுக்கு மேல் தவறு செய்து வருவதாகவும், அந்தக் குடும்பம் கட்சியில் இருக்கக் கூடாது என்பதிலும் ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கருத்திலும் மாற்றமில்லை என்று கூறினார்.


Advertisement

இது குறித்து புதிய தலைமுறையிடம் தொலைபேசி வழியே பேசிய அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த வைகைச் செல்வன், பன்னீர் செல்வம் பழைய பல்லவியையே பாடுகிறார் என்று கூறினார். ஜெயலலிதா இறந்த நிலையில் கட்சி காப்பாற்றப்படும் என்ற அடிப்படையில்தான் சசிகலா பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார் எனவும், அது பன்னீர் செல்வமும் அறிந்ததுதான் எனவும் வைகைச் செல்வன் கூறினார். அதே போல ஜெயலலிதா மரணம் குறித்தும் விளக்கம் அளித்தாகி விட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

பன்னீர் செல்வத்தின் கருத்து குறித்து தங்களது அணியின் மூத்த தலைவர்களிடம் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்போம் எனவும் வைகைச் செல்வன் தெரிவித்தார்.


Advertisement
Related Tags : vaigai chelvan admk opsadmk ops vaigai chelvan
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement