சென்னை மெட்ரோவில் நாளையும் இலவச பயணம் செய்யலாம்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னை மெட்ரோ ரயிலில் நாளையும் (13-02-2019) பொதுமக்கள் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.


Advertisement

சென்னை டி.எம்.எஸ் - வண்ணாரப்பேட்டை இடையே புதிய வழித்தடத்தில் மெட்ரோ ‌ரயில் சேவை கடந்த 10-ம் தேதி முதல் தொடங்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் இன்று இரவு வரை சென்னை மெட்ரோவில் இலவசமாக பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. பொதுமக்களிடையே மெட்ரோ ரயில் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த இலவச பயண அறிவிப்பை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டது. இதனையடுத்து சிறுவர்கள் பெரியவர்கள் என ஏராளமானோர் நேற்றும், இன்றும் மெட்ரோ ரயிலில் பயணம் செய்து மகிழ்ந்தனர்.


Advertisement

இந்நிலையில் 4-வது நாளாக நாளையும் (13-02-2019) மெட்ரோ ரயிலில் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement