[X] Close >

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேசிய காவலர்.. கதறவிடும் காவல்துறை

belsons-reappoinment-in-question

திருச்சியில் ஜல்லிகட்டு போராட்டத்தில் பங்கேற்று பேசிய ஊர்க்காவல் படை வீரர் பெல்சனுக்கு மீண்டும் பணி வழங்கப்படவில்லை. இதனால் அவர் தனியார் மருத்துவமனையில் பணி செய்து வருகிறார்.


Advertisement

திருச்சியில் ஊர்காவல் படையில் பணியாற்றி வந்தவர் பெல்சன். மணப்பாறையை சொந்த ஊராக கொண்ட இவர், திருச்சியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது திடீரென போராட்டக்காரர்கள் மத்தியில், ” ஜல்லிக்கட்டு நமது தமிழர்களின் பாரம்பரியம். என்னை போல் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக உள்ள பல போலீசார் இங்கு உள்ளனர்.

போலீசாரை திட்ட வேண்டாம்” என நெகிழ்ச்சியாக உரையாற்றினார். காவல் துறைக்கு சாதகமாக பேசியிருந்தாலும், ஜல்லிக்கட்டு போராட்டம் முடிவடைந்து 3 மாதங்களை கடந்த பிறகும் இதுவரை பெல்சனுக்கு பணி வழங்கவில்லை. இது குறித்து திருச்சி மாநகர ஆணையர் அருணிடம் பெல்சன் மனு கொடுத்தபோது, “உங்கள் மீது வழக்கு போடாமல் இருப்பதே பெரிது. அமைதியாக வேறு வேலைக்கு செல்லுங்கள்” என சொல்லி அனுப்பிவைதிருக்கிறார். அதிக விரும்பி ஊர்காவல் படையில் இணைந்து பணிபுரிந்து வந்த பெல்சினுக்கு அவரது உயரதிகாரியின் பதில் ஏமாற்றத்தை தந்ததால், கடந்த 3 மாதங்களாக தனியார் மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். 5 முறை தனது சிறப்பான பணிக்காக மாவட்ட ஆட்சியரிடம் பல விருதுகளை வாங்கியுள்ள பெல்சனுக்கு மீண்டும் காவல் பணியில் சேர வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், தன் மீது ஏதேனும் வழக்கு பதிவு செய்து விடுவார்களோ என்ற அச்சம் தொற்றிக்கொண்டுள்ளது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close