'ஸ்விகி' -யில் ஆர்டர் செய்த நூடுல்சில் 'ரத்தக்கறை பேண்டேஜ்'

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னையில் வசிக்கும் பாலமுருகன் என்பவர் ஞாயிற்றுக்கிழமை ஸ்விகி ஆப் மூலம் சேலையூரில் உள்ள தனியார் ஹோட்டலில் சேஸ்வான் நூடுல்ஸை ஆர்டர் செய்துள்ளார். அதை பாதி சாப்பிட்டபின்பு, அந்த உணவில் ரத்தக்கறை படிந்த பேண்டேஜ் இருப்பதை கண்டு அதிர்ந்து போய் உள்ளார். 


Advertisement

இது குறித்து அவர் பேஸ்புக் பதிவில் வாந்தி எடுப்பது போல் உள்ள எமோஜியை போட்டு சாப்பாட்டு புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார். அதில் தான் “ஸ்விகி மூலம் ஒரு உணவகத்தில் சிக்கன் சேஸ்வான் நூடுல்ஸை  ஆர்டர் செய்ததாகவும், அதில் உபயோகப்படுத்திய ரத்தக்கறை படிந்த பேண்டேஜ் இருப்பதை கண்டு அதிர்ந்து போனதாகவும் குறிப்பிட்டிருந்தார். 


Advertisement

இது குறித்து அவர் ஸ்விகியில் புகார் அளித்திருந்தார். இதனை தொடர்ந்து இரண்டொரு நாளில் பதிலளிப்பதாக  ஸ்விகியிலிருந்து பதில் வந்துள்ளது. ஆனாலும் இந்த நிகழ்விற்கு பிறகும் ஸ்விகி தொடர்ந்து அந்த ரெஸ்டாரண்ட் உடன் உறவு வைத்துள்ளது. அதற்கு பிறகு அந்த ரெஸ்டாரண்டை தொடர்பு கொண்டபோது, பேக்கிங் செய்யும் நபருக்கு அடிபட்டு இருந்ததாகவும், தவறுதலாக உணவு பொட்டலத்தில் வந்துவிட்டதாகவும் கூறியுள்ளனர். இது போன்ற ஒரு சம்பவம் இனி நடக்காமல் பார்த்துக் கொள்வதாகவும் அந்த உணவகம் தெரிவித்தாக அவர் தன் பதிவில் கூறியுள்ளார்.

நன்றி: ‘The News Minute'

loading...

Advertisement

Advertisement

Advertisement