[X] Close >

சின்னதம்பியை விரட்ட வந்தது கும்கி யானை சுயம்பு !

New-Kumki-Elephant-Brought-To-Send-Chinnathambi

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கரும்புத்தோட்டத்தில் தஞ்சமடைந்துள்ள காட்டுயானை சின்னத்தம்பியை பிடிக்க மாற்று கும்கி யானையான சுயம்பு வரவழைக்கப்பட்டுள்ளது.


Advertisement

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கிருஷ்ணாபுரம் பகுதியில் சுற்றித் திரிந்த சின்னத்தம்பி யானை கண்ணாடிபுதூர் என்ற இடத்தில் தஞ்சமடைந்தது. பின் கிருஷ்ணாபுரம் பகுதியில் கடந்த ஆறு நாட்களாக இருந்த சின்னத்தம்பி அடுத்து செங்கழனிபுதூரில் முகாமிட்டது. 


Advertisement

பின்னர் அங்கிருந்து வெளியேறிய சின்னத்தம்பி அமராவதி ஆற்றுப்படுகைக்கு வந்து தோட்டத்தில் புகுந்து கரும்பு, வாழை போன்றவை சாப்பிட்டு ஒய்வெடுத்தது. காட்டுக்குள் போகாமல் திருப்பூர் மாவட்ட ஊருக்கு அருகே சுற்றித்திரியும் சின்னதம்பி யானையை அதன் போக்கிலேயே வனத்துக்குள் விரட்ட வனத்துறையினர் முயற்சி செய்து வருகின்றனர். 

கண்ணாடிப்புத்தூர் கிராமத்தில் உள்ள கரும்புத்தோட்டத்தில் தொடர்ந்து தஞ்சமடைந்துள்ள சின்னதம்பி யானையை விரட்ட கும்கியானைகள் கலீமும், மாரியப்பனும் வரவழைக்கப்பட்டன. காட்டு யானை சின்னத்தம்பியை விரட்டும் போது கும்கி மாரியப்பன் யானை மிரண்டு ஓடியது. இதையடுத்து காட்டு யானையை விரட்டும் பணியில் இருந்து மாரியப்பன் விடுவிக்கப்பட்டு டாப்சிலிப் யானைகள் முகாமிற்கு திருப்பி அனுப்பப்பட்டது. 


Advertisement

இந்நிலையில் மாரியப்பன் யானைக்கு மாற்றாக, சுயம்பு என்ற மற்றொரு கும்கி யானை தற்போது கண்ணாடிப்புத்தூருக்கு வரவழைக்கப்பட்டு உள்ளது. சின்னதம்பியை கும்கி சுயம்பு கட்டுக்குள் கொண்டு வருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close