ஆட்சியர் அலுவலகத்துக்குள் புகுந்து கணினி திருட்டு

Computer-theft-in-thiruvarur-district-collector-office

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து கணினி திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் கருவூல அலுவலகத்தில் இருந்த கணினி திருடு போயுள்ளது. மேலும் அப்பகுதியில் நிறுத்தியிருந்த மோட்டார் பைக் ஒன்றையும் மர்மநபர்கள் தீ வைத்து கொளுத்தி விட்டு சென்றுள்ளனர். மோட்டார் பைக் இருந்த இடத்தின் அருகாமையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்துவதற்கான வாக்கு இயந்திரங்கள் பாதுகாக்கும் அறையும் உள்ளது. அதிர்ஷ்டவசமாக அந்த அறைக்குள் தீ பரவாமல் வாக்கு இயந்திரங்கள் தப்பித்து உள்ளன.


Advertisement

வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளதால் தினந்தோறும் 4 போலீசார் அந்த அறையை சுழற்சி முறையில் பாதுகாத்து வருகின்றனர். இந்த நிலையில் நள்ளிரவில் கருவூல அறையிலிருந்த கணினியை திருடி, மோட்டார் பைக்கை எரித்து சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சம்பவத்தின்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள காவலர்கள் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் எங்கே சென்றனர் என்ற விவரமும் தெரியவில்லை. இதுகுறித்து திருவாரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement