விதையை வைத்தே பழத்தின் ருசியை தீர்மானிக்காதீர்கள் என ‘90 எம்.எல்’. படத்தின் டீசர் குறித்து நடிகை ஓவியா கருத்து தெரிவித்துள்ளார்.
பெண் இயக்குநர் அனிதா உதீப் இயக்கத்தில் நடிகை ஓவியா நடித்துள்ள திரைப்படம் ‘90 எம்.எல்’. அடல்ட் காமெடியாக இந்தத் திரைப்படம் உருவாகியுள்ளது. ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா நடித்து வெளியாகவுள்ள திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது.
ஆபாச வசனங்கள், முத்தக்காட்சிகள் என ட்ரெய்லர் பல்வேறு விமர்சனங்களை சந்தித்துள்ளது. ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களிடையே நல்ல பெயர் வாங்கிய ஓவியா, இது போன்ற அடெல்ட் படங்களில் நடிப்பதை தற்போது தவிர்த்து இருக்கலாம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மற்றொரு தரப்பினர் ஓவியா தைரியமான காதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பதாக ஆதரவு குரலும் தெரிவித்து வருகின்றனர்
இணையத்தில் கலவையான விமர்சனங்களை பெற்ற ‘90 எம்.எல்’ ட்ரெய்லர் குறித்து நடிகை ஓவியா கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ''விதையை வைத்தே பழத்தின் ருசியை தீர்மானிக்காதீர்கள். சென்சார் செய்யப்பட்ட முழுப் படத்துக்காக காத்திருங்கள்'' என்று கூறி ‘90 எம்.எல்’ படத்தில் அடல்ட் ட்ரெய்லரின் லிங்கையும் பகிர்ந்துள்ளார்.
அவருடைய ட்விட்டுக்கு பதிலளித்து பலரும் எதிர்ப்பும் ஆதரவுமாகவே கருத்து தெரிவித்துள்ளனர்.
Loading More post
“அண்ணன்-தம்பி பிரச்னைகள் இருந்தால் பேசி தீர்ப்போம்”- ஓபிஎஸ்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை: நாளை நேரில் ஆஜராகுகிறாரா ரஜினி?
ஜனவரி 21-ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஊழியர் மரணம்: காரணம் வேறு என்கிறது உ.பி அரசு
நீதிபதிகள் நியமனம் குறித்த குருமூர்த்தி பேச்சு: சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு
அர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன?!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்