சிறுமிக்கு சூடு வைத்து சித்ரவதை செய்த தந்தை : போலீசில் புகார்

The-father-has-tortured-with-warmth-his-Daughter-in-Marthandam

மார்த்தாண்டம் அருகே தாயில்லாத தனது 7 வயது மகளுக்கு சூடு வைத்து சித்ரவதை செய்த தந்தை மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது


Advertisement

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே சூரியக்கோடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (33). இவரது மனைவி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகளும் 4 வயதில் ஒரு மகனும் உள்ளனர். 7 வயதான சிறுமி, வாவறை அரசு பள்ளியில் 2 ம் வகுப்பு பயின்று வருகிறார். இந்த சூழலில் பள்ளிக்கு சென்ற மாணவியின் கன்னத்தில் தீக்காயம் இருந்துள்ளது. இதனைக்கண்ட பள்ளி ஆசிரியர்கள் மாணவியிடம் விசாரித்த போது, தனது தந்தை கடந்த சில மாதங்களாக தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்வதாகவும் சிறுமி கூறியுள்ளார். இதனையடுத்து சிறுமியின் புகார் குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிக்கு பள்ளி நிர்வாகத்தினர் தகவலளித்தனர்.

Image result for சூடு வைத்து சித்ரவதை


Advertisement

தகவலறிந்த  மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் அந்த சிறுமியை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். சிறுமியின் புகாரின் அடிப்படையில் தந்தை மணிகண்டன் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மணிகண்டன் மீது காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement