பொறியியல் படித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் வேலை!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்திய ராணுவத்தில், பொறியியல் படித்தவர்களுக்கு SSC(T) (Short Service Commission Technical course) - என்ற பயிற்சியுடன் கூடிய பல்வேறு வேலைக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், திறமையும் வாய்ந்த திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


Advertisement

பயிற்சிக்கான காலிப்பணியிடங்கள்:
SSC (Tech) -53 ஆண்கள் - 175
SSCW (Tech) -24 பெண்கள் - 14
SSCW (Tech & Non Tech) widows of Defence personnel - 02
மொத்தம் = 191 காலிப்பணியிடங்கள்

பயிற்சிகால அளவு:
49 வாரங்கள்


Advertisement

முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.02.2019
பயிற்சி தொடங்கும் காலம்: அக்டோபர் 2019

வயது வரம்பு:
i. SSC (Tech) -53 ஆண்கள் மற்றும் SSCW (Tech) -24 பெண்கள்:  20 முதல் 27 வயது வரை இருக்க வேண்டும். 02.10.1992 முதல் 01.10.1999-க்குள் பிறந்தவராக இருக்க வேண்டும்.
ii. SSCW (Tech & Non Tech) widows of Defence personnel : அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.


Advertisement

கல்வித்தகுதி:
பி.இ / பி.டெக் படித்த அல்லது கடைசி வருடம் படித்துக் கொண்டிருக்கும், அனைத்து (சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் / எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ், ஏரோனாடிக்ஸ், கம்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் & டெலிகாம், பவர் எலக்ட்ரானிக்ஸ் & டிரைவ்ஸ், புரொடக்‌ஷன் இன்ஜினியரிங், ஆர்க்கிடெக்‌ஷர் இன்ஜினியரிங்) பொறியியல் பட்டதாரிகளும் இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

முக்கிய குறிப்பு:
1. கடைசி வருடம் பொறியியல் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள், தங்களது பட்டப்படிப்பு நிறைவு சான்றிதழை 01.10.2019-க்குள்ளும், மதிப்பெண் / பட்டப்படிப்பு சான்றிதழ்களை பயிற்சியில் சேர்ந்த பின்பு 12 வாரங்களுக்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பிக்காதவர்கள் பயிற்சியிலிருந்து நீக்கப்படுவார்கள்.

2. பயிற்சியின் போது, பயிற்சி பெறுபவர்கள் திருமணம் செய்யக்கூடாது. அப்படி செய்பவர்கள் பயிற்சியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள்.

3. பயிற்சியை வெற்றிகரமாக முடித்தவர்களுக்கு, சென்னை பல்கலைக் கழகத்தின் மூலம்  ‘ Post Graduate Diploma in Defence Management and Strategic Studies’ - என்ற பட்டம் வழங்கப்படும்.

4. இந்தப் பயிற்சிக்கான அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும்.

5. உடற்தகுதி: நல்ல உடல் மற்றும் மனநலத்தையும் பெற்றிருத்தல் வேண்டும். 
உடல் எடை மற்றும் உயரம்: ஆண்கள்: 157.5 செ.மீ உயரத்திற்கு தகுந்த எடையும், பெண்கள்: 152 செ.மீ உயரத்துடன், 42 கிலோ எடையும் இருத்தல் வேண்டும்.

6. உடலில் எந்தப் பாகத்திலும் பச்சைக்குத்தி இருக்கக்கூடாது.

7. தேர்வுக்கட்டணம் கிடையாது. 

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும்.
முதலில், www.joinindianarmy.nic.in - என்ற இணையத்திற்கு சென்று, அதில் ‘Officer Entry Appln/login' - ஐ க்ளிக் செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம்.

மேலும், இது குறித்த முழு தகவல்களை பெற,
https://joinindianarmy.nic.in/writereaddata/Portal/NotificationPDF/ssc_tech_53.pdf - என்ற இணையத்தில் சென்று பார்க்கலாம்.

loading...

Advertisement

Advertisement

Advertisement