மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை மெட்ரோ பணிகள் விரைவில் தொடக்கம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை ஜிஎஸ்டி சாலையில் உள்ள வண்டலூர் கிளாம்பாக்கம் வரை நீட்‌டிப்பதற்கான சாத்தியக்‌கூறுகள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

தமிழக அரசின் 2019-20 நிதியாண்டிற்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்தப் பட்ஜெட்டில்,போக்குவரத்து திட்டங்கள் குறித்து பல்வேறு அறிவிப்புகளை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டார். மீனம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து கிளாம்பாக்கத்தில் அமைய உள்ள மெட்ரோ பேருந்து பணிமனை வரை ரயில் சேவையை நீட்டிக்க ஆராயப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். 

Image result for சென்னை மெட்ரோ


Advertisement

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ம் கட்டத்தின் கீழ் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையும் மாதவரம் முதல் கோயம்பேடு வரையும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். மெட்ரோ ரயில் திட்டத்தில் 2ம் கட்டத்தை செயல்படுத்துவது மூலம் மெட்ரோ ரயில் சேவை பகுதியின் தூரம் 172.91 கிலோ மீட்டராக அதிகரித்து பயன்பெறுவோர் எண்ணிக்கை உயரும் என்றும் துணை முதல்வர் தெரிவித்தார். 

Image result for சென்னை மெட்ரோ

தமிழகத்தில் புதிய BS - 6 தரத்திலான 12 ஆயிரம் பேருந்துகளும் 2 ஆயி‌ரம் மின்சார பேருந்துகளும் வாங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக 500 மி்ன்சார பேருந்துகள் சென்னை, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் இயக்கப்படு‌ம் என்றும் 2 ஆயிரம் BS - 6 பேருந்துகள் தமிழகம் முழுவதும் இயக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement