அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே 7 மாத கர்ப்பிணியை அவரது பெற்றோரே அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொன்பரப்பி என்ற பகுதியைச் சேர்ந்த தங்கராசு-பவானி தம்பதியின் மகள் சர்மிளா. இவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், சர்மிளாவின் பெற்றோரே அவரைக் கொலை செய்ததாகத் தெரியவந்துள்ளது.
சர்மிளா பெற்றோர் எதிர்ப்பை மீறி கலைராஜன் என்பவரைக் காதலித்து வந்திருக்கிறார். 2008 ஆம் ஆண்டு கலைராஜனுடன் தலைமறைவான சர்மிளாவை மீண்டும் அழைத்து வந்த பெற்றோர், உறவினரான அன்புமணிக்கு 2009 ஆம் ஆண்டில் திருமணம் செய்துவைத்தனர். அன்புமணி மூலம் பெண் குழந்தைக்கு தாயான சர்மிளா, கணவருடன் வாழப் பிடிக்காமல் வீட்டிலிருந்து வெளியேறி கடந்த 4 ஆண்டுகளாக காதலனுடன் குடும்பம் நடத்தியுள்ளார். மேலும், காதலன் கலைராஜனை கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டார்.
7 மாத கர்ப்பிணியாக இருந்த சர்மிளாவை சமாதானமாக செல்வதாக கூறி வீட்டிற்கு பெற்றோர் அழைத்து வந்துள்ளனர். வீட்டிற்கு வந்ததும், கர்ப்பத்தை கலைக்குமாறு பெற்றோர் கட்டாயப்படுத்தியதாகவும், அதற்கு சர்மிளா மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர், கர்ப்பிணி சர்மிளாவை செந்துறையிலுள்ள உறவினர் வீட்டில் அடித்துகொலை செய்துவிட்டு பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்தது போன்று நாடகமாடியது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கொலைச் சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து பெற்றோரை கைது செய்தனர்.
Loading More post
கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி
ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக் கடைகள், தியேட்டர்கள் இயங்கத் தடை
தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு!
“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு அமல்” - தமிழக அரசு
மேக்ஸ்வெல்-டிவில்லியர்ஸ் அதிரடி! கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு!
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி