குடும்பப் பிரச்னைகளில் கைதுகளை தவிர்க்க நீதிபதி அறிவுரை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

குடும்ப பிரச்னைகள், சொத்து தகராறுகள் தொடர்பான வழக்குகளில் கைது நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Advertisement

மனைவியைத் தாக்கியது தொடர்பான புகாரில் முன்ஜாமீன் கோரி ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், குடும்பப் பிரச்னைகள், சொத்து தகராறுகள் தொடர்பான வழக்குகளில் கைது நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும் எனக் காவல்துறைக்கு அறிவுறுத்தினார்.


Advertisement

7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் சட்டப் பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில், குற்றம்சாட்டப்பட்டவருக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்த வேண்டும் என ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், கைது செய்யப்படுபவர்கள் உடனடியாக ஜாமீனில் வெளிவருவதைத் தடுக்கும் வகையில் வெள்ளிக்கிழமைகளில் கைது நடவடிக்கைகள் மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் எனவும் நீதிபதி அறிவுறுத்தினார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement