[X] Close

“உங்கள் ஹெல்மெட் எங்கே?” - போலீசை தட்டிக் கேட்ட இளைஞருக்கு சிறையா?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மும்பையில் ஹெல்மெட் அணியாத போலீசை தட்டிக் கேட்ட இளைஞர்களுக்கு சிறை தண்டனை கிடைத்துள்ளது. 


Advertisement

கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. கான்ஸ்டபிள் பத்ரிநாத் ராமு என்பவர் ஹெல்மெட் அணியாமல் மும்பை நகரின் கேர்வாடி பகுதியில் சென்றுள்ளார். அப்போது, பவன் சய்யத்னி என்ற வாலிபர் கான்ஸ்டபிள் ராமுவை தடுத்து நிறுத்தியுள்ளார். வண்டி நின்ற உடனேயே அதன் சாவியை பவன் எடுத்துக் கொண்டார். ஹெல்மெட் அணியாததால் சாவியை கொடுக்க முடியாது என்று கூறியுள்ளார். ‘உங்கள் ஹெல்மெட் எங்கே’ என்று தொடர்ச்சியாக ராமுவிடம் பவன் கேட்டுள்ளார்.

           


Advertisement

இந்தக் காட்சிகளை அப்பகுதிவாசி அசோக் கவாஸ் என்பவர் வீடியோ பதிவு எடுத்துள்ளார். பவன் உடன் உள்ளூர் இளைஞர்கள் சிலர் இருந்துள்ளனர். கான்ஸ்டபிள் ராமுவுக்கு தெரிந்த ஒருவர் அவருக்கு ஹெல்மெட் கொடுத்த உடன் இந்தச் சம்பவம் ஒரு முடிவுக்கு வந்துள்ளது. 

இருப்பினும், ஏன் என்னை குறிவைத்து இப்படி செய்தீர்கள் என்று ராமு, பவனிடம் கேட்டுள்ளார். அதற்கு, ‘இது சட்டத்தின் ஆட்சி நடைபெறும் மண்’ என்று பவன் பதில் அளித்துள்ளார். அதோடு இனிமேல் ஒழுங்கா சட்ட விதிகளை பின்பற்ற வேண்டும் என எச்சரித்ததாக தெரிகிறது. கான்ஸ்டபிள் ராமு ஹெல்மெட் அணிந்த பிறகு அவரிடம் சாவியை பவன் கொடுத்துள்ளார். இந்தக் காட்சிகள் அனைத்தும் ஞாயிற்றுக் கிழமை முதல் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

             


Advertisement

சம்பவ இடத்திலிருந்து சென்ற ராமு, பவான் உள்ளிட்ட இளைஞர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளார். முதலில் இரண்டு நாள் போலீஸ் காவலில் வைத்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர், அவர்களுக்கு 14 நாட்கள் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், போலீஸ் கான்ஸ்டபிள் ராமுவிற்கு ஹெல்மெட் அணியாத குற்றத்திற்காக ரூ500 அபராதம் விதிக்கப்பட்டது. விசாரணை மேற்கொண்ட போது, சம்பவத்தின் போது அவர்கள் மது அருந்தியிருந்தது தெரியவந்துள்ளதாக மூத்த இன்ஸ்பெக்டர் சுபாஷ் ஜாதவ் தெரிவித்துள்ளார். 

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement