’ஸ்ட்ரீட் டான்சர்’ என்ற இந்தி படத்தில் பிரபுதேவாவும் இந்தி ஹீரோ வருண் தவானும் மீண்டும் இணைந்து நடிக்கின்றனர்.
ஹாலிவுட்டில் நடனம் தொடர்பாக, அதிகமான படங்கள் வெளிவருவது உண்டு. சமீப காலமாக இதுபோன்ற படங்களின் வருகை குறைந்துள்ளன. இந்தியில் அவ்வப்போது டான்ஸ் தொடர்பான படங்கள் வருவது உண்டு. தமிழில் சமீபத்தில் ’லக்ஷ்மி’ என்ற படம் வெளியானது. பிரபல இந்திப் பட நடன இயக்குனர் ரெமோ டிசோஸா, ஏபிசிடி (எனிபடி கேன் டான்ஸ்) என்ற படத்தை பிரபுதேவா நடிப்பில் இயக்கினார். இது தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியானது.
(ரெமோ, பிரபுதேவா, வருண் தவான், ஸ்ரத்தா கபூர்)
சிறப்பான வரவேற்பை பெற்ற இந்தப் படத்தின் இரண்டாம் பாகமும் வெளியானது. இதில் பிரபுதேவா வுடன் பிரபல இளம் இந்தி ஹீரோ வருண் தவானும் இணைந்து நடித்தார். இந்தப் படமும் இந்தியில் வரவேற்பை பெற்றது.
இதையடுத்து ரெமோ டிசோஸா, ’ஸ்ட்ரீட் டான்சர்’ என்ற படத்தை இயக்குகிறார். இதில் வருண் தவான் ஹீரோவாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் பிரபுதேவா நடிக்கிறார். சோனம் பஜ்வா ஹீரோயினாக நடிக்கிறார். இவர் தமிழில் ’கப்பல்’ படத்தில் ஹீரோயினாக நடித்தவர். முதல் கட்ட படப்பிடிப்பு தொடங்கி யுள்ளது.
இரண்டாம் கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடக்கிறது. இதில் பிரபுதேவா கலந்துகொள்கிறார் என்றும் 3டியில் உருவாகும் இந்தப் படம், இந்தியாவில் வெளியான டான்ஸ் படங்களிலேயே முக்கியமான தாகவும் பிரமாண்டமானதாகவும் இருக்கும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.
பிரபுதேவாவுடன் நடிப்பது பற்றி வருண் தாவன் கூறும்போது, ‘நடனக்கடவுள் பிரபுதேவா வுடன் மீண்டும் இணைகிறேன். அவருடன் மீண்டும் நடிப்பதை நினைக்கும்போதே உற்சாக மாக இருக்கிறது’ என்று தெரிவித் துள்ளார்.
Loading More post
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் லாலு பிரசாத் அனுமதி
திட்டமிட்டப்படி குடியரசுத்தினத்தன்று டிராக்டர் பேரணி: விவசாயிகள் உறுதி!
டெல்லி விவசாயிகள் போராட்டம்.. சூடுபிடிக்கும் தமிழக அரசியல் களம்.. முக்கியச் செய்திகள்!
இறந்த மீனவரின் உடலை ஊர்வலமாக எடுத்துச் செல்ல போலீசார் மறுப்பு - உறவினர்கள் சாலைமறியல்
பெண் காவலரும், ஆண் காவலரும் ஒரே அறையில் இருந்ததற்காக டிஸ்மிஸ் செய்ய முடியாது: நீதிமன்றம்
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!
ஜெயலலிதா பாணியில் ஸ்டாலின் : உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறதா விசிக, மதிமுக?
எளிமையான மனிதர், வலிமையான அரசியல்வாதி, 'வைரல்' பின்புலம்... யார் இந்த பெர்னி சாண்டர்ஸ்?
அடுத்தடுத்து விழும் மம்தா அமைச்சர்களின் விக்கெட்.. மேற்கு வங்கத்தில் அரசியல் டுவிஸ்ட்!